மார்ச் 22 குள்ள.. இந்த 2 Samsung போனுல 1 வாங்கிடுங்க.. ரூ.500, ரூ.1000 இல்ல.. ரூ.17,000 லாபம்.. உட்றா வண்டிய!
நீங்கள் ஏற்கனவே ஒரு சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள், அடுத்த மாடலுக்கு 'அப்கிரேட்' ஆக விரும்புகிறீர்கள் என்றாலும் சரி.. அல்லது இனிமேல் தான் ஒன்றை வாங்கி, புதிய கஸ்டமராக மாறப்போகிறீர்கள் என்றாலும் சரி.. மார்ச் 22க்குள் அதை செய்து விடுங்கள்!
ஏனென்றால் சாம்சங் (Samsung) நிறுவனம் கேலக்ஸி அல்ட்ரா டேஸ் (Galaxy Ultra Days) என்கிற சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. மார்ச் 12 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள இந்த சிறப்பு விற்பனையானது மார்ச் 22 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.

பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா மாடல்களை கூடுதல் சலுகைகளோடு வாங்க முடியும். இந்த விற்பனையின் சிறப்பம்சம் என்னவென்றால்.. கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அல்லது கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு அப்கிரேட் ஆக விரும்பும் பயனர்களுக்கு மட்டுமின்றி, மற்ற பயனர்களுக்கும் கூட சலுகைகள் கிடைக்கும்.
அசல் விலை நிர்ணயம்: இந்தியாவில் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,39,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,19,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.1,39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆபர் விலை நிர்ணயம்: கேலக்ஸி அல்ட்ரா டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் ஏற்கனவே ஒரு எஸ்-சீரீஸ் ஸ்மார்ட்போனை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலை வாங்கினால் ரூ.17,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். ஒருவேளை எஸ்23 அல்ட்ராவை வாங்கினால் ரூ.13,000 வரையிலான தள்ளுபடி மற்றும் நன்மைகள் கிடைக்கும்.

மற்ற வாடிக்கையாளர்கள் எஸ்24 அல்ட்ரா மீது ரூ.12,000 வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்களை பெறலாம். இங்கே ரூ.12,000 என்பது ரூ.6,000 அப்கிரேட் போனஸ் + ரூ.6,000 பேங்க் கேஷ்பேக்கை உள்ளடக்கியது. இதேபோல எஸ்23 அல்ட்ரா மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இங்கே ரூ.10,000 என்பது ரூ.5,000 அப்கிரேட் போனஸ் + ரூ.5,000 பேங்க் கேஷ்பேக்கை உள்ளடக்கியது.
இதுதவிர்த்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) விருப்பங்களும் அணுக கிடைக்கும். மேற்கண்ட சலுகைகள், சாம்சங் ரீடெயில் ஸ்டோர்கள், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களின் வழியாக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா ஆர்மர் உடனான 6.8-இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் யுஐ 6.1 உடன் வரும் எஸ்24 அல்ட்ராவானது 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 200எம்பி மெயின் கேமரா உடனான குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமரா உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்: இது 6.8-இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5.1 உடன் வரும் அல்ட்ரா எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் கூட 200எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








