Home
Mobile

மைக்ரோ சிம் கார்டுக்கு சப்போர்ட் செய்யும் யூனெக்டோ ஸ்மார்ட்போன்!

By Super
மைக்ரோ சிம் கார்டுக்கு சப்போர்ட் செய்யும் யூனெக்டோ ஸ்மார்ட்போன்!

மைக்ரோ சிம் பொருத்தும் வசதி கொண்ட குவாட்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது யுனெக்டோ நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே இதில் பெரிய அளவு கொண்ட சிம் கார்டு மற்றும் மைக்ரோ சிம் கார்டு போன்றவற்றையும் இதில் பயன்படுத்த முடியும். இப்படி இரண்டு விதமான சிம் கார்டுகளுக்கும் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பேர்ட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நெட்வொர்க் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினையும் வழங்கும். 800 X 480 டிஎப்டி திரை தொழில் நுட்பமும் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெற முடியும்.இதன் இயங்குதளத்திற்கு சிறந்த வகையில் சப்போர்ட் செய்ய சிங்கிள் கோர் 650 மெகாஹெர்ட்ஸ் மீடியா டெக் 6573 பிராசரும் இதில் உள்ளது.

வாடிக்கையாளர்களை அதிகம் மகிழ்விக்கும் வகையில் இன்னும் ஒரு சிறப்பான விஷயமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக் டைம் மற்றும் ஸ்டாண்ட்-பை டைமிற்கும் சிறப்பாக இந்த யுனெக்டோ ஸ்மார்ட்போனின் 1,400 எம்ஏஎச் பேட்டரி துணை புரியும். இன்னும் இதன் ஸ்வாரிசயமான மற்ற பல தொழில் நுட்ப விவரங்கள் சரிவர வெளியாகவில்லை.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 விலையில் இருந்து ரூ.5,000 விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாவது பற்றி வேரெந்த கருத்தும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X