இந்தியாவுக்கு வரும் மர்மமான Poco போன்: பணத்தை வேஸ்ட் பண்ணாம வெயிட் பண்ணுங்க!

|

ஒரு மர்மமான போக்கோ போன் இந்தியாவுக்கு விரைவில் வர இருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் தோன்றி இருக்கிறது. புதிய POCO போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வரும் மர்மமான Poco போன்: பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!

மர்மமான POCO போன் ஒன்று BIS சான்றிதழ் தளத்தில் தோன்றி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 22127PC95I என்ற மாடல் எண்ணுடன் தோன்றி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் இதில் தெளிவுப்படுத்தவில்லை. POCO 22127PC95I ஆனது மறுபெயரிடப்பட்ட Redmi போனாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

22127PC95I என்ற மாடல் எண் கொண்ட புதிய மர்மமான POCO போன் இந்திய BIS சான்றிதழில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தகவல் முகுல் சர்மா மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மாடலின் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவலும் இதில் இல்லை. POCO 22127PC95I என்ற மாடல் குறித்து முன்னதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

BIS சான்றிதழ் தளத்தில் மாடல் எண்ணைத் தவிர வேறு எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. POCO 22127PC95I ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் இது மறுபெயரிடப்பட்ட ரெட்மி போனாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

POCO X5 5G ஸ்மார்ட்போனானது சீனாவில் 3C மற்றும் IMDA சான்றிதழ் இணையதளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. POCO X4க்கு அடுத்தப்படியாக வரும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இது இருக்கலாம். POCO X4 5Gஐ போன்றே இது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு எந்த தகவலும் POCO X5 5G குறித்து இல்லை.

இருப்பினும் POCO X5 5G இல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. n5, n7, n38, n41, n77 மற்றும் n78 உள்ளிட்ட பல 5G பேண்டுகள் ஆதரவை இந்த போன் கொண்டிருக்கும் என FCC பட்டியல் காட்டுகிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் Android 13 OS அடிப்படையிலான MIUI 14 மூலம் இயக்கப்படலாம். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ எஸ்ஓசி மற்றும் 120Hz IPS LCD டிஸ்ப்ளே பொருத்தி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் POCO X5 ஆனது Bureau of Indian Standards (BIS) இணையதளத்திலும் காணப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு வரும் மர்மமான Poco போன்: பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!

இதுகுறித்து வெளியான கூடுதல் தகவலை பார்க்கலாம், போக்கோ நிறுவனத்தின் இந்த புதிய போக்கோ போன் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ஏற்கனவே கூறியபடி இந்த போனில் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

குறிப்பாக 64எம்பி டிரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

எனவே நீங்கள் புதிய 5ஜி போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறிது காலம் மட்டும் காத்திருங்கள், சிறந்த 5ஜி போனை போக்கோ களமிறக்க இருக்கிறது என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது.

Best Mobiles in India

English summary
Unnamed mysterious Poco phone is coming to India soon: Price, Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X