கதறவிட போறாரு.. ரூ.16000 பட்ஜெட்ல 100MP கேமரா.. 12GB ரேம்.. 66W சார்ஜிங்.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐபோன் 13 மினி போனைவிட கொஞ்சம் பெருசு, ஆனால், வெறும் ரூ.16,000 பட்ஜெட்டில் காம்பாக்ட் டிசைன் மட்டுமல்லாமல், 100 எம்பி மெயின் கேமரா, 32 எம்பி செல்பீ ஷூட்டர், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 4000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் 5ஜி (Unihertz Jelly Max 5G) வெளியாகி இருக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்கள் மிரளவிடுகின்றன. இதுகுறித்த விவரம் முழு இதோ.
யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் அம்சங்கள் (Unihertz Jelly Max Specifications): இந்த ஜெல்லி மேக்ஸ் போன் காம்பாக்ட் டிசைனில் 5.05 இன்ச் (720 x 1520 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. பஞ்ச்-ஹோல் கட்அவுட் (Punch-hole Cutout) கேமரா டிசைன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7300 5G SoC) சிப்செட் வருகிறது. ஆகவே, பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது.
மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் போனில் டூயல் நானோ சிம் கார்டு (Dual Nano SIM Card) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் வருகிறது. ஹைபிரிட் சப்போர்ட் உள்ளது. டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது.
100 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமராவில் மிட்-பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் போனில் பேக் மவுண்டெட் ஃபிங்கபிரிண்ட் சென்சார் (Back Mounted Fingerprint Sensor) வருகிறது.

இதுபோக ஜி-சென்சார் (G-sensor), கைரோஸ்கோப் (Gyroscope), பிராக்சிமிடி (Proximity) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) வருகின்றன. பேசியல் ரெககனைஷன் (Facial Recognition) சப்போர்ட் உள்ளது. இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் போனில் 4000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் உள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 20 நிமிடங்களில் 90 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, பேட்டரி பேக்கப் பற்றிய கவலை இருக்காது. இந்த ஜெல்லி மேக்ஸ் போனானது 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ வருகிறது.
மேலும், வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி பீச்சர்களும் வருகின்றன. இதுபோக இன்பிராரெட் போர்ட் (Infrared Port), லவுட் ஸ்பீக்கர் (Loudspeaker) வருகிறது. சீன மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் தயாரிப்பு மற்றும் ஷிப்பிங் தொடங்குகிறது.
இந்த போனின் விலை ரூ.16,639ஆக இருக்கிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஷிப்பிங் கிடைக்கலாம். வரும் அக்டோபர் மாதத்தில் தெரிந்துவிடும். வின்டேஜ் காம்பாக்ட் டிசைனில், அப்டேடட் பீச்சர்களை கொண்ட போன் வேண்டுமானால், இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி மேக்ஸ் மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








