முடிஞ்சா இந்த ரூ.3000 போன் கிட்ட மோதி பாருங்க.. சீன முதலாளிகள் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இந்திய பிராண்ட்!

|

இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஒரு மொபைல் பிராண்ட் ஆனது - சியோமி, ரெட்மி, ரியல்மி, ஒப்போ, இன்பினிக்ஸ், டெக்னோ போன்ற - சீன மொபைல் தயாரிப்பாளர்களின் கண்களில் விரலை விட்டும் ஆட்டும்படியான ஒரு 4ஜி மொபைல் போனை (4G Mobile Phone) வெறும் ரூ.2999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன போன்? சீன நிறுவனங்களிடம் சவால் விடும்படி இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

இந்த போனில் முக்கிமான ஸ்பெஷாலிட்டி ஒன்னு இருக்கு!

இந்த போனில் முக்கிமான ஸ்பெஷாலிட்டி ஒன்னு இருக்கு!

இந்திய மொபைல் நிறுவனமான ஐடெல் (Itel Mobile) மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி (Magic X Pro 4G) என்கிற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைலின் மிக முக்கியமான சிறப்பம்சம் - இதன் கனெக்டிவிட்டி தான். ஏனென்றால் மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ள ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்தால், அதன் கீழ் ஒரே நேரத்தில் 8 டிவைஸ்கள் வரை கனெக்ட் செய்ய முடியும்; கூடவே ஹைஸ்பீட் ஹாட்ஸ்பாட் எக்ஸ்பீரியன்ஸையும் பெற முடியும்!

இது சற்றே புதுமையான ஒரு அம்சம் ஆகும். இது பட்ஜெட் விலையிலான சீன மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி, ஜியோ போனிற்கும் கூட சிக்கலை ஏற்படுத்தலாம்!

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

நினைச்சு பார்க்க முடியாத சர்வீஸ் வாரண்டி வேற!

நினைச்சு பார்க்க முடியாத சர்வீஸ் வாரண்டி வேற!

வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த மொபைல் போனிற்கு 2 வருடங்களுக்கான சர்வீஸ் வாரண்டியும் கிடைக்கிறது. அதுமட்டுமா? இது தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, ஒடியா, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய 12 மொழிகளுக்கான ஆதரவையும் வழங்குகிறது.

எல்லாவற்றை விடவும் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஐடெல் மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி மொபைல் ஆனது டூயல் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது. அதாவது இதுவொரு டூயல் சிம் கார்டு மொபைல் போன் ஆகும்!

கர்வ்டு டிசைனில் கட்சிதமாக ஒரு டிஸ்பிளே!

கர்வ்டு டிசைனில் கட்சிதமாக ஒரு டிஸ்பிளே!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது மிகவும் அழகான கர்வ்டு டிசைனை பெற்றுள்ளது. அதில் மிகவும் கச்சிதமான 2.4-inch (6.1 cm) அளவிலான QVGA டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. ஆக இது உங்கள் கைகளை விட்டு அவ்வளவு எளிதில் நழுவி விடாது!

நீலம் மற்றும் கருப்பு என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் Magic X Pro 4ஜி மொபைல் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டின் வழியாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

இதில் டெக்ஸ்ட்-ஐ ஸ்பீச் ஆக மாற்றும் கிங் வாய்ஸூம் உள்ளது!

இதில் டெக்ஸ்ட்-ஐ ஸ்பீச் ஆக மாற்றும் கிங் வாய்ஸூம் உள்ளது!

ஐடெல் (Itel) நிறுவனத்தின் இந்த மேஜிக் எக்ஸ் ப்ரோ 4ஜி போனில் கிங்வாய்ஸ் (KingVoice) என்கிற ஒரு ஆதரவும் உள்ளது. அறியாதோருக்கு இது எழுத்துக்களை பேச்சாக மாற்றும் ஒரு டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் அம்சம் ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஒரு VGA ரியர் கேமரா உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது டூயல் சிம் கார்டுகளுக்கான ஆதரவை வழங்கும் மற்றும் எச்டி-எனேபிள்டு VoLTE கால்களை ஆதரிக்கும். அதுமட்டுமின்றி, வைஃபை வழியாக டூயல் 4G VoLTE ஆதரவையும் வழங்கும்.

பக்தி மற்றும் சினிமா பாடல்களுக்கான பூம் பிளே!

பக்தி மற்றும் சினிமா பாடல்களுக்கான பூம் பிளே!

இந்த போனில் ஒரு பிரத்யேக ம்யூசிக் ஆப் உள்ளது. அது பூம் பிளே (Boom Play) என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் திரைப்படங்கள், பக்தி போன்ற பல்வேறு வகைகளின் கீழ் உலகம் முழுவதும் இருந்து 74 மில்லியன் பாடல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

கடைசியாக, Itel Magic X Pro 4G ஆனது 2500mAh திறன் கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது ஒரு சார்ஜர் மற்றும் ஒரு ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெட்செட்டுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Unbelievable Hotspot Connectivity For Just Rs 2999 Itel Launched New 4G Mobile Called Magic X Pro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X