Home
Mobile

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. மிகவும் மலிவான விலைக்கு iPhone விற்கும் Flipkart.. என்ன மாடல்? வாங்குவது எப்படி?

மிகவும் பழைய ஐபோன் மாடல்களின் மீது கூட இப்படி ஒரு ஆபர் கிடைக்காதே என்று ஆச்சரியப்பட வைக்கும்படியாக.. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் ஆனது ஆப்பிளின் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல் மீது நம்ப முடியாத நேரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் வழங்கும் எல்லா சலுகைகளையும் சரியாக பயன்படுத்தினால் வெறும் ரூ.8,249 க்கு ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலை உங்களால் வாங்க முடியும். அதெப்படி? என்னென்ன சலுகைகள்? இதோ விவரங்கள்:

ஐபோன் 14 பிளஸ் கிட்டத்தட்ட ஐபோன் 14-ஐ போன்ற அம்சங்களையே கொண்டுள்ளது. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, பிளஸ் மாடல் ஆனது சற்றே பெரிய டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரியுடன் வருகிறது. ஆரம்பத்தில் ஐபோன் 14 சீரீஸ் மாடல்களானது பயனர்களின் கவனத்தை ஈர்க்க தவறியது. ஆனால் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகத்திற்கு பின்னர், குறிப்பாக ஆன்லைன் தளங்களில் கிடைக்க தொடங்கிய சலுகைகளுக்கு பின்னால்.. ஐபோன் 14 சீரீஸின் விற்பனை சூடுபிடித்தது.

மிகவும் மலிவான விலைக்கு iPhone விற்கும் Flipkart.. என்ன மாடல்?

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்தியாவில் ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த மாடலின் மீது ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 14 பிளஸ் ஆனது முழுதாக ரூ.50,750 என்கிற தள்ளுபடி க்கு பிறகு வெறும் ரூ.8,249 க்கு வாங்க கிடைக்கிறது.

அசல் அறிமுக விலையோடு ஒப்பிடும் போது, ரூ.20,901 என்கிற நேரடி தள்ளுபடிக்கு பிறகு ஐபோன் 14 பிளஸ் தற்போது ரூ.58,999 க்கு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.750 தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸின் விலை ரூ.58,249 ஆக குறைக்க முடியும்.

மேலும் ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்குபவர்கள் தங்களுடைய பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியையும் பெறலாம். மேற்கண்ட அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலின் இறுதி ஆபர் விலையை வெறும் ரூ.8,249 க்கு கொண்டுவர முடியும்.

பழைய ஸ்மார்ட்போனிற்காக பிளிப்கார்ட் கொடுக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது நீங்கள் கொடுக்கும் மாடலை பொறுத்து, அதன் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சில ஆயிரங்களையாவது குறைக்க முடியும். ஆக எப்படி பார்த்தாலும் ஐபோன் 14 பிளஸ் மாடலை முன்னெப்போதும் இல்லாத அளவிலான குறைந்த விலைக்கு நிச்சயம் வாங்க முடியும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஆனது 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட ஏ15 பயோனிக் சிப், சிங்கிள் சார்ஜில் 26 மணி நேர பேட்டரி லைஃப், 12எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு கிடைப்பதை போலவே, அமேசான் இந்தியாவில் ஐபோன் 15 மீதும் அபாரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 மீது 11% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது அதன் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.71,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் அறிமுக விலை ரூ.79,900 ஆகும்.

Best Mobiles in India

English summary
Unbelievable Discount on iPhone 14 Plus Avail These 3 Offers Buy This iPhone Under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X