Jio X1 5G போன்.. 6.72-இன்ச் டிஸ்பிளே, 5600mAh பேட்டரி, 16GB ரேம்..? இது மட்டும் வந்துச்சு.. மார்க்கெட் காலி!
பட்ஜெட் விலையில் 4ஜி ஆதரவை வழங்கும் ஜியோ போன்களை தொடர்ந்து, 5ஜி ஆதரவை வழங்கும் புதிய ஜியோ போன் ஒன்று, கூடிய விரைவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியானதில் இருந்து பல வகையான லீக்ஸ் மற்றும் கான்செப்ட்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஜியோ எக்ஸ்1 5ஜி (Jio X1 5G) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய சில சுவாரசியமான.. அதேசமயம் நம்பவே முடியாத சில கான்செப்ட்ஸ் (Concepts மற்றும் எதிர்பார்ப்புகளை (Expectations) பற்றிய தொகுப்பே இது. ஆனால் இதுமட்டும் உண்மையானால்.. ஒட்டுமொத்த 5ஜி மார்க்கெட்டும் காலி ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஜியோ எக்ஸ்1 5ஜி டிஸ்பிளே: இது 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவின் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Protection) சேர்க்கப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில், ஜியோ எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போனானது தற்செயலான கீறல்கள் மற்றும் "ட்ராப்"களில் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதோடு சேர்த்து நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸைசியும் வழங்கும்.
ஜியோ எக்ஸ்1 5ஜி சிப்செட்: இது மீடியாடெக் டைமென்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 Chipset) உடன் வரலாம். இது பவர் எஃபிசியன்ட் கொண்ட 5என்எம் ஆர்கிடெக்சரில் கட்டமைக்கப்பட்ட சிப்செட் ஆகும். இது உண்மையாகும் பட்சத்தில், ஜியோ எக்ஸ்1 5ஜி ஆனது அன்றாட பணிகள், மல்டி டாஸ்கிங் மற்றும் லைட் கேமிங்கிற்கான மென்மையான செயல்திறனை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஜியோ எக்ஸ்1 5ஜி ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான (Virtual RAM) ஆதரவுடன் 8ஜிபி ரேம் இடம்பெறலாம். அதாவது இது மொத்தம் 16ஜிபி அளவிலான மொத்த ரேம்-ஐ பேக் செய்யும். கூடுதலாக, இது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டிருக்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில், ஜியோ எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போனானது "போதும் போதும்!" என்கிற அளவிற்கு ஸ்டோரேஜை வழங்கும்.
ஜியோ எக்ஸ்1 5ஜி கேமரா செட்டப்: இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்யலாம். அதில் 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் இடம்பெறலாம். இது உண்மையாகும் பட்சத்தில், ஜியோ எக்ஸ்1 5ஜி ஆனது, ஷார்ப் ஆன மெயின் கேமரா புகைப்படங்கள், ஓரளவிலான வைட் ஆங்கிள் புகைப்படங்கள் மற்றும் பொக்கே எஃபெக்ட்களை வழங்கும்.

ஜியோ எக்ஸ்1 5ஜி பேட்டரி: இது சக்திவாய்ந்த 5600mAh பேட்டரியை பேக் செய்யலாம். இதுவே நம்பமுடியாத தகவலாக இருக்கிறது. போதாக்குறைக்கு, இந்த ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast Charging) ஆதரிக்கும் என்றும் கான்செப்ட்கள் மற்றும் வதந்திகள் பரவுகிறது. இத்தெளலாம் பார்த்தால்.. "ஏன் டா.. கனவா இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேணாமா டா!" என்றே கேட்க தோன்றுகிறது.
ஏனென்றால் ஜியோ நிறுவனமானது இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை (Cheapest 5G Smartphone) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது உண்மைதான். இதற்காக அமெரிக்காவை சேர்ந்த செமிகண்டக்டர் தயாரிப்பாளரான குவால்காம் ( US-based semiconductor maker Qualcomm) நிறுவனத்துடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்பதும் உண்மைதான்
ஆனால் இந்த கூட்டணி, நாம் மேற்கண்ட பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கிய 5ஜி ஸ்மார்ட்போனில் (Premium 5G Smartphone) வேலை செய்யவில்லை; மாறாக ரூ.8000 பட்ஜெட்டில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை (Budget 5G Smartphone) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications