4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அட்டகாசமான நோக்கியா 2.!

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கிய 8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது, உலகளாவிய சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் அதிக வரவேற்ப்பை பெற்றது, தற்சமயம் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கிய 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அட்டகாசமான நோக்கியா 2.!

எப்சிசி (அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் )வெளியிட்ட சில அறிவிப்பில் இந்த நோக்கிய 2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வைரலாக பரவியது. இந்த ஸ்மார்ட்போன் எல்டிஇ வசதி கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எப்சிசி:

எப்சிசி:

எப்சிசி ஆவணங்களின் படி, நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் இதுவரை இடம்பெறாத சில முக்கிய அம்சங்கள் இந்த நோக்கியா 2 பிராண்டட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த நோக்கிய 2 ஸ்மார்ட்போனின் பேட்டரி பொறுத்தவரை 2 நாட்கள் தாராளமாக பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே அதிக மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது, மேலும் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது.

ஸ்னாப்டிராகன் 212:

ஸ்னாப்டிராகன் 212:

இந்த நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 3:

நோக்கியா 3:

நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தமட்டில் ரூ.9,499ஆக இருந்தது, ஆனால் இப்போது வரும் நோக்கிய 2 ஸ்மார்ட்போனின் விலை
சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Unannounced Nokia 2 to pack a large 4000 mAh battery ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X