Home
Mobile

8 நாட்கள் ஸ்டான்ட்-பை டைம் கொண்ட புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்

By Super

8 நாட்கள் ஸ்டான்ட்-பை டைம் கொண்ட புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்
சிறப்பான ஸ்மார்ட் மொபைல்களை கொடுப்பதில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு மொபைல்களை வழங்குகின்றன. இந்த வித்தையை மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் பயன்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு மொபைல் விற்பனை ஒன்றும் புதிதல்ல. அதனால் சிறந்த மொபைல்களையே கொடுக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். எக்ஸ்-55 ப்ளேட் என்ற மொபைலை அறிமுகப்படுத்தஇருக்கிறது.

மிகவும் தடிமன் குறைந்ததாகவும், கவர்ச்சிகரமாவும் இந்த புதிய மொபைல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்ட மொபைலாக வருகிறது.

2.4 இஞ்ச் எல்சிடி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது.

லெட் ஃப்ளாஷ் தொழில் நுட்பம் உள்ள இந்த கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம். அதே போல் சிறந்த வீடியோக்களையும் எடுத்துகொள்ள முடியும்.

இந்த மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்யும். இதில், எப்எம் ரேடியோவும் இருக்கிறது.

இதில், 8 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியையும், 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரியையும் விரிவுப்படுத்திக்கொள்ளலாம்.

4 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும் எல்ஐ-அயான் 800 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் மூலம் 8 நாட்கள் தொடர்ந்து ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

விரைவில் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-55 மொபைலின் விலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X