மிரண்டுபோன ஆப்பிள் & நோக்கியா: 6080எம்ஏஎச் + 6 இன்ச் + 4 கேமராக்கள்.!

|

உலேபோன் (Ulefone) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் உலேபோன் பவர் 3 (Ulefone Power 3) ஸ்மார்ட்போனின் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல டீஸர்கள் மற்றும் டிட் பிட்ஸ்களை தொடர்ந்து தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பவர் தொடரின் கீழ் வெளியாகவும் மூன்றாம்-ஜென் ஸ்மார்ட்போன் ஆன உலேபோன் பவர் 3 ஆனது கற்பனைக்கு எட்டாத ஒரு பாரிய 6080எம்ஏஎச் அளவிலான நீக்க முடியாத பேட்டரி கொண்டுள்ளது. இதன் ஒரு முழுமையான சார்ஜ் ஆனது நான்கு நாட்களுக்கு பேட்டரி ஆயுளை வழங்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்

120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்

ஒரு 5வி / 3ஏ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் அடைய கூடிய இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில் உலேபோன் பவர் 3 ஆனது குவாட்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

4 கேமராக்கள்

4 கேமராக்கள்

அதாவது டி.எஸ்.எல்.ஆர் போன்ற பொக்கே விளைவுகளுடன் புகைப்படங்களை கைப்பற்ற அனுமதிக்கும் 5எம்பி இரண்டாம் சென்சார் உடன் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பு

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பு

மறுபக்கம், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு மென்மையான எல்இடி ப்ளாஷ் உடனான 21 எம்பி + 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. வடிவமைப்பு வாரியாக, உலேபோன் பவர் 3 ஆனது ஒரு உலோக சட்டத்துடன் வருகிறது. அதன் இரட்டை கேமரா அமைப்பின் கீழ் ஒரு கைரேகை ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

அளவீட்டில் (பரிமாணங்களை பொறுத்தவரை) இந்த 159.2 x 75.9 x 9.85 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் கொண்டுள்ள இக்கருவியின் பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனர் ஆனது (நிறுவனத்தின்படி) 0.1 வினாடிகளில் சாதனத்தை திறக்க உதவும்.

'ஃபேஸ் ஐடி'

'ஃபேஸ் ஐடி'

உடன் இந்த உலேபோன் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது 'ஃபேஸ் ஐடி' அம்சத்துடன் வருகிறது, இது வேகமாக, அதிக பாதுகாப்பான மற்றும் வசதியான திறனை அடைய 130 க்கும் மேற்பட்ட முக அம்சங்களை அங்கீகரிக்கிறது.

6 இன்ச் முழுஎச்டி+ டிஸ்ப்ளே

6 இன்ச் முழுஎச்டி+ டிஸ்ப்ளே

2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 விகிதம் கொண்ட 6 இன்ச் முழுஎச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவி அழகாக மெல்லிய பெஸல்களை கொண்டுள்ளது. மற்றும் 90.8% ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தையும் வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன், மீடியா டெக் ஹீலியோ பி23 64-பிட் ஆக்டா-கோர் ப்ராஸசர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ப்ரீ இண்ஸ்டால்ட்டு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்குகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மேம்படுத்தலை மார்ச் 2018-க்குள் பெறும்.

உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்

உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்

ஆர்வமுள்ளவர்கள் உலேபோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பவர் 3 பற்றிய மேலும் பல விபரங்களை அறியலாம். இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே 220 அமெரிக்க டாலர்கள் என்கிற ஒரு உலகளாவிய விளைநிர்ணயத்தை பெற்றுள்ளது.

தள்ளுபடிகள் மற்றும் பரிசு

தள்ளுபடிகள் மற்றும் பரிசு

பிளாக் மற்றும் கோல்ட் வண்ண மாதிரிகளில் கிடைக்கும் இந்த இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 8-ஆம் தேதிக்கு முன்புவரை ப்ரீ ஆர்டருக்கு திறந்து வைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை 299 அமெரிக்க டாலர்கள் ஆகும் என்பதும் இக்கருவியுடன் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளையும் நிறுவனம் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Ulefone Power 3 With a Huge 6080mAh Battery, 6-inch Full HD+ Display Officially Launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X