சீனக்காரனே மிரண்டுட்டான்.. மினி ரஃடு 5G மொபைல்.. தூக்கி எறிந்தால் கூட உடையவே உடையாது.. விலை என்ன தெரியுமா?
யூலிஃபோன் (Ulefone) நிறுவனம் அதன் ஆர்மர் சீரிஸ் வரிசையில், புதிதாக யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ (Ulefone Armor Mini 20T Pro) மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ (Ulefone Armor Mini 20 Pro) ஆகிய இரண்டு ரஃடு ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி மொபைல் சந்தையில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத மினி வெர்ஷன் ரஃடு ஸ்மார்ட்போன் (Mini rugged smartphone) மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
6 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கூட, உடையவே உடையாத இரண்டு மினி ரக்டு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது Ulefone பிராண்ட், இந்த போனில் ஏனென அம்சங்கள் இடம்பெறுகிறது என்று பார்க்கலாம். இந்த இரண்டு யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் 4.7" இன்ச் HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது.

யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ (Ulefone Armor Mini 20T Pro) மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ (Ulefone Armor Mini 20 Pro):
இந்த யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ (Ulefone Armor Mini 20T Pro) மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ (Ulefone Armor Mini 20 Pro) ஆகிய இரண்டு போன்களும் MIL-STD-810H சான்றுதல் பெற்ற மில்லிட்ரி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது IP68/IP69K பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதனால், கடினமான மற்றும் முரடான செயல்பாடுகளையும் இந்த போன் தாங்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த போன்கள் 2 மீட்டர் தூரம் வரை கீழே விழுந்தாலும், 2 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் 24 மணி நேரம் வரை வைக்கப்பட்டாலும், இந்த சாதனங்களுக்கு எந்தவித கோளாறும் உருவாகாது என்ற நம்பிக்கையை நிறுவனம் வழங்கியுள்ளது. இது அவுட்டோர் மற்றும் ப்ரொபெஷனல் யூஸேஜிற்கு சிறந்தது. 20T ப்ரோ மாடலில் உலகத்தின் முதல் FLIR Lepton 3.5 தெர்மல் இமேஜிங் கேமரா (thermal imaging camera) இடம்பெறுகிறது.
அதேபோல், 20 ப்ரோ மாடலில் இன்பிராரெட் நைட் விஷன் (infrared night vision) கேமராவை கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 6200mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது.
யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ (Ulefone Armor Mini 20T Pro and Ulefone Armor Mini 20 Pro Price):
இவை 16GB ரேம் (RAM) உடன் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போன்கள் 2TB வரையிலான கூடுதல் ஸ்டோரேஜ் அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த Ulefone Armor Mini 20 Pro போனின் அறிமுக விற்பனை விலை ரூ. 20,000 முதல் துவங்குகிறது. அதேபோல், Ulefone Armor Mini 20T Pro போனின் விலை ரூ. 27,000 விலை முதல் துவங்குகிறது.
குறைந்த விலையில், நீண்ட நாளுக்கு நீடித்து உழைக்கும் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த யூலிஃபோன் ஆர்மர் மினி 20T ப்ரோ (Ulefone Armor Mini 20T Pro) மற்றும் யூலிஃபோன் ஆர்மர் மினி 20 ப்ரோ (Ulefone Armor Mini 20 Pro) போன்கள் அற்புதமான தீர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








