Home
Mobile

மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் உடையவே உடையாது.. பட்ஜெட்ல பெஸ்ட் ரக்டு போன் இதான்.. என்ன மாடல்? என்ன விலை?

அடேங்கப்பா.! இப்படி ஒரு உறுதியான ஸ்மார்ட்போன்லாம் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கிறதா? என்று வியப்படையும் வகையில் யூலிஃபோன் (Ulefone) நிறுவனம் இப்போது அதன் ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) வரிசையில் புதிதாக யூலிஃபோன் ஆர்மர் 27T ப்ரோ (Ulefone Armor 27T Pro) என்ற புதிய உறுதியான மொபைல் சாதனத்தை உயர்தர தெர்மல் கேமராவுடன் (Thermal camera) அறிமுகம் செய்யாவுள்ளது. இந்த போன் எவ்வளவு உறுதியானது என்றால், இதை நீங்கள் மாடியில் இருந்து தூக்கி எறிந்தால் கூட இதுஉடையாதாம். Ulefone Armor 27T Pro அவ்வளவு ஸ்ட்ராங்.

பட்ஜெட் விலையில் எளிதில் உடைய கூட பிராண்டட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதை விட, நீங்கள் இந்த Ulefone Armor 27T Pro சாதனத்தை வாங்கலாம். முதல் காரணம் இது உடையாது. மற்ற காரணங்கள் என்று பார்க்கையில், இது பட்ஜெட்டில் தெர்மல் இமேஜிங் கேமரா, 5ஜி அம்சம் மற்றும் 10,600mAh திறன் கொண்ட பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. 10,600mAh பேட்டரி உடன் இப்போது உங்களால் ஒரு பிராண்டட் ஸ்மார்ட்போன் வாங்க முடியுமா சொல்லுங்கள்.

மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் உடையவே உடையாது.. பெஸ்ட் ரக்டு போன்

யூலிஃபோன் ஆர்மர் 27T ப்ரோ (Ulefone Armor 27T Pro):

முடியவே முடியாது. அதனால் தான், இந்த முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஈர்க்கக்கூடிய வகையில் மக்களை கவர்ந்துள்ளது. இந்த சாதனம் 6.78" இன்ச் அளவு கொண்ட 1,080 x 2,460 பிக்சல்கள் தீர்மானம் உடைய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் உடன் 5G இணைப்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது.

டூயல் சிம் கார்டு உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவையும் வழங்குகிறது. இது 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கூடுதலாக, இது ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த போனை வைத்து உங்கள் ஹெட்ஃபோன்ஸ், ஸ்மார்ட்வாட்ச் போன்ற பிற சாதனங்களை நீங்கள் சார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

IP68, IP69K மற்றும் MIL-STD-810H தரநிலைகளுக்கு இணங்குவதாகக் கூறி, இந்த கனமான உருவாக்கம் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது. ஸ்மார்ட்போனில் ஐஆர் படங்களைப் பிடிக்கும் திறன் கொண்ட நைட் விஷன் கேமராவும் உள்ளது. யூலிஃபோன் ஆர்மர் 27T ப்ரோவில் uSmart இணைப்பான் உள்ளது. இருப்பினும் Ulefone Armor 27T Pro இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது நிச்சயமற்றது.

யூலிஃபோன் ஆர்மர் 27T ப்ரோ விலை (Ulefone Armor 27T Pro Price):

நேரடியாக இறக்குமதி செய்ய விரும்பாத மக்கள், பொறுமையாக காத்திருந்தால், அமேசானில் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம். Ulefone Armour 27T Pro ஸ்மார்ட்போனை நீங்கள் நேரடியாக அதன் சொந்த வலைத்தளம் வழியாகவும் ஆர்டர் செய்யலாம். ஆனால், அதில் சில சிக்கல்கள் இருக்கிறது. இதை நீங்கள் ஆர்டர் செய்தால், இதன் மதிப்பிடப்பட்ட டெலிவரி நேரம் 17 நாட்கள் வரை செல்கிறது. மற்றொரு சிக்கல், ரீபிளேஸ்மென்ட் மற்றும் வாரன்டி கிளைம்களில் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

Ulefone Armour 27T ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது ஷிப்பிங் உட்பட $320.99 டாலர் என்ற விலையை குறிக்கிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 26999 வரை செல்கிறது. இது நேரடி இறக்குமதிக்கு கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ulefone Armor 27T Pro 5G Rugged Smartphone With Thermal Camera Launched Under Budget Price Rs 26999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X