Home
Mobile

பட்ஜெட் விலை.. தெர்மல் கேமரா.. உடையவே உடையாத Mobile.. Ulefone ரிலீஸ் செய்த புது போன்.. உடனே ஆர்டர் பண்ணுங்க..

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, யூலிஃபோன் (Ulefone) நிறுவனம் அதன் புதிய யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ ரக்டு ஸ்மார்ட்போன் (Ulefone Armor 25T Pro Rugged Smartphone) சாதனத்தை தெர்மல் கேமராவுடன் (Thermal camera) அறிமுகம் செய்துவுள்ளது. இதன் விலை என்ன?

புதிய யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி ரக்டு ஸ்மார்ட்போன் (Ulefone Armor 25T Pro 5G Rugged Smartphone) சாதனம் பற்றிய சிறப்பம்ச விபரம் மற்றும் இதன் விலை பற்றிய விபரங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி சாதனம் ஒரு ரக்டு ஸ்மார்ட்போன் சாதனமாக மிகவும் உறுதியான பாடியை கொண்டு, மிலிட்டரி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை.. தெர்மல் கேமரா.. உடையவே உடையாத Mobile.. Ulefone ரிலீஸ்..

யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி ரக்டு ஸ்மார்ட்போன் (Ulefone Armor 25T Pro 5G Rugged Smartphone):

இந்த யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ மொபைல் 6.78" இன்ச் முழு எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக, இதன் டிஸ்பிளேவை நிறுவனம் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வழங்கி அசத்தியுள்ளது. இதில் 5ஜி யூலிஃபோன் ரக்டு ஸ்மார்ட்போன் மாடல் டைமென்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 SoC) உடன் வந்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6GB LPDDR4X RAM உடன் 256GB UFS 2.1 ஸ்டோரேஜ் அம்சத்துடன் வெளிவந்துள்ளது. இதில் கூடுதலாக 6ஜிபி விர்ச்சுவல் (6GB virtual RAM) ஸ்டோரேஜ் (Storage) ஆதரவும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) வழியாக 2TB வரையிலான மெமரியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. ஆகையால், ஸ்டோரேஜ் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.

பட்ஜெட் விலை.. தெர்மல் கேமரா.. உடையவே உடையாத Mobile.. Ulefone ரிலீஸ்..

தெர்மல் இமேஜிங் கேமராவுடன் சக்தி வாய்ந்த உடையவே உடையாத மொபைல்:

இந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள தெர்மோவூ தெர்மல் இமேஜிங் கேமரா தான், இது -20°C to 550°C வரையிலான ஹீட் சிக்னேச்சர்களை டிடெக்ட் செய்கிறது. தெர்மல் கேமராவுடன் 64MP நைட் விஷன் கேமரா (OmniVision OV64B1B) இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு இன்ஃபிராரெட் LEDகளுடன் சேர்ந்து, இருட்டில் தெளிவான, விரிவான படங்களை எடுக்க உதவும்.

முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி (Battery) உடன் 33W மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless charging) அனுபவத்தை வழங்குகிறது. முக்கிய குறிப்பாக, இந்த ரக்டு ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் (Wireless Reverse Charging) அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், மற்றொரு ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

பட்ஜெட் விலை.. தெர்மல் கேமரா.. உடையவே உடையாத Mobile.. Ulefone ரிலீஸ்..

யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி ரக்டு ஸ்மார்ட்போன் விலை (Ulefone Armor 25T Pro 5G Rugged Smartphone Price):

இந்த சாதனம் பிளாக் ஃபிரோஸ்ட் நிறத்துடன் 273 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 22,000 விலையாகும். இது தற்போது முதற்கட்டமாக, யூலிஃபோன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ஆன்லைனில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற தளங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும். தெர்மல் கேமராவுடன் Ulefone Armor 25T Pro அருமையான போனாக பட்ஜெட்டில் அசத்துகிறது.

Best Mobiles in India

English summary
Ulefone Armor 25T Pro 5G Rugged Smartphone With Night Vision Thermal Imaging Camera Launched Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X