வியப்பில் உலகம்.. Ulefone அறிமுகம் செய்த தெர்மல் கேமரா 5G ரக்டு Mobile.. இவ்வளவு கம்மி விலை தானா?
யூலிஃபோன் (Ulefone) பிராண்ட் இப்போது அதன் ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) வரிசையில் புதிதாக யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ (Ulefone Armor 25T Pro) என்ற சாதனத்தை உயர்தர தெர்மல் கேமராவுடன் (Thermal camera) அறிமுகம் செய்யாவுள்ளது.
தெர்மல் கேமரா என்றதும், இதற்கு முன்பு ரக்டு ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட சாதாரண தெர்மல் கேமரா போலத் தான் இதுவும் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள். இதுவொரு தெர்மோவூ தெர்மல் இமேஜிங் கேமரா (thermal imaging ThermoVue camera) என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தூக்கி வைத்து பேசும் அளவிற்கு அப்படி என்ன இந்த கேமராவில் இருக்கிறதென்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம்.

யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ ரக்டு ஸ்மார்ட்போன் (Ulefone Armor 25T Pro Rugged Smartphone):
இந்த தனித்துவமான தெர்மல் கேமரா பற்றியும், இந்த புதிய யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ ரக்டு ஸ்மார்ட்போன் (Ulefone Armor 25T Pro Rugged Smartphone) பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். முதலில் இந்த புதிய யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி (Ulefone Armor 25T Pro 5G) பற்றிய சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.
யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி சாதனம் ஒரு ரக்டு ஸ்மார்ட்போன் சாதனமாக மிகவும் உறுதியான பாடியை கொண்டு, மிலிட்டரி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ மொபைல் 6.78" இன்ச் முழு எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை வழங்குகிறது. இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்பை பெறுகிறது.
இந்த புதிய யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி என்று இரண்டு விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் குறிப்பிடுகிறது. இதில் 5ஜி யூலிஃபோன் ரக்டு ஸ்மார்ட்போன் மாடல் டைமென்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 SoC) உடன் வெளிவரவிருக்கிறது. அதேபோல், 4ஜி சாதனம் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ சிறப்பம்சம் (Ulefone Armor 25T Pro Specs):
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6GB LPDDR4X RAM உடன் 256GB UFS 2.1 ஸ்டோரேஜ் நன்மையை பெரும் என்று கூறியுள்ளது. இதில் கூடுதலாக 6ஜிபி விர்ச்சுவல் (6GB virtual RAM) ஸ்டோரேஜ் (Storage) ஆதரவும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) வழியாக 2TB வரையிலான மெமரியும் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் தனிச்சிறப்பே இதில் உள்ள தெர்மோவூ தெர்மல் இமேஜிங் கேமரா தான், இது -20°C to 550°C வரையிலான ஹீட் சிக்னேச்சர்களை டிடெக்ட் செய்கிறது. தெர்மல் கேமராவுடன் 64MP நைட் விஷன் கேமரா (OmniVision OV64B1B) இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு இன்ஃபிராரெட் LEDகளுடன் சேர்ந்து, இருட்டில் தெளிவான, விரிவான படங்களை எடுக்க உதவும். முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் 33W மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த சாதனம் பிளாக் ஃபிரோஸ்ட் நிறத்துடன் 300 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 24,900 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. வழக்கமான கேமரா போனை போல் இல்லாமல், தெர்மல் கேமராவுடன் போன் வாங்க Ulefone Armor 25T Pro சரியான சாய்ஸ் மக்களே.


Click it and Unblock the Notifications








