நம்பிக்கை வீண் போகல! இரண்டு அட்டகாசமான ரியல்மி போன்கள் இந்தியாவுக்கு வருது.!
புதிய ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் ஜூன் 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன்கள் தரமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த புதிய ரியல்மி போன்கள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரத்யேக மைக்ரோ-தளம் உள்ளது, இதில் புதிய ரியல்மி போன்களின் சில முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் போன்களின் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே: ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போன்கள் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன.
பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த
அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.
கேமரா: ரியல்மி 11 ப்ரோ ஆனது 100எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி
செல்பி கேமரா கொண்டுள்ளது ரியல்மி 11 ப்ரோ மாடல். அதேபோல் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 200எம்பி ரியர் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +
2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் இடம்பெற்றுள்ளது.
ப்ராசஸர்: ஆக்டா-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் கொண்டுள்ளன இந்த இரண்டு ரியல்மி போன்கள். எனவே இந்த போன்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டுள்ளன ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போன்கள்.
ஸ்டோரேஜ்: ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போன்கள் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு இந்த போன்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி வசதி: 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 11 ப்ரோ ஸமார்ட்போன். அதேபோல் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு
போன்களும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

கனெக்டிவிட்டி: 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போன்கள். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன இந்த இரண்டு ரியல்மி போன்கள். அதேபோல் இந்த ரியல்மி போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








