டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் இரண்டு எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

இரண்டு பெயரிடப்படாத சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன, மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் சற்று வித்யாசங்கள் உள்ளது. மேலும் பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் இந்த சாதனங்களின் முன் மற்றும் பின்புற பேனலை வெளியிட்டது சோனி நிறுவனம்

டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் இரண்டு எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.!

இரண்டு சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் பொதுவாக பெசல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களின் பேனலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் 5.7-இன்ச 4கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் இரண்டு எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.!

விரைவில் வெளிவரும் இந்த சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்கள் 6ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இநத எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்கள்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.English summary
Two Sony Xperia smartphones with bezel less displays and dual rear cameras leaked online ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot