புதிய இசெட்டிஇ(ZTE) ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசெட்டிஇ (ZTE) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதனுடைய மாடல் எண் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது, மேலும் புதிய இசெட்டிஇ ஸ்மார்ட்போன் எண் இசெட்டிஇ இசெட்982.
இந்த (இசெட்982)ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இசெட்டிஇ பிளேட் ஏ6 ஸ்மார்ட்போனை விட பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

6-இன்ச் டிஸ்பிளே:
இசெட்982 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, மேலும் 1080 பிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர்:
இந்த இசெட்982பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்440 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இசெட்982 ஸ்மார்ட்போன் 16எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் 8எம்பி செல்பீ கேமரா இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

கைரேகை ஸ்கேனர்:
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications