ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3: சிறப்பு ஒப்பீட்டு பார்வை

By Super
|
ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3: சிறப்பு ஒப்பீட்டு பார்வை

வெளி வந்த பிறகு வெற்றி நடை போடும் ஸ்மார்ட்போன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்னும் விற்பனைக்கே வராமல் வெற்றி வாகை சூட காத்திருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் இங்கே வழங்குகிறோம்.

ஆப்பிள் ஐபோன்-5, கேலக்ஸி எஸ்-3 என்ற ஸ்மார்ட்போன்களுக்கு தான் இத்தனை வரவேற்பும். இன்னும் வெளி வராத இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன், ஒரு தனி தன்மையை கொண்டதாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஒன்றும் குறைந்தது அல்ல. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதால், சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும்.

ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் திரை வசதி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில் பெரிய திரையை கொண்டதாக தெரிகிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 4.6 இஞ்ச் அமோல்டு திரை உள்ளது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் குவாடு கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸைனோஸ் 4212 பிரசஸரும் பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலின்படி பார்த்தால் அதி வேகத்தினையும், சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அதிக பிக்ஸல் துல்லியம் கொண்ட கேமராவினை கொண்டாதாக தெரிகிறது. இதில் 12 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படங்களை இன்னும் அழகாக கொடுக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் கூடுதலாக டியூவல் லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பமும் இருப்பதாக தெரிகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகள் இருக்கும். ஐபோன்-5, சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வரவேற்பினை பெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளி வந்த பிறகு இதன் முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X