Home
Mobile

சிறப்பான டவுன்லோட் வசதியில் புதிய சோனி எக்ஸ்பீரியா!

By Super
சிறப்பான டவுன்லோட் வசதியில் புதிய சோனி எக்ஸ்பீரியா!

சமீபத்தில் தான் சோனி எக்ஸ்பீரியா ஆர்கோ எச்டி ஸ்மார்ட்போன் ஜப்பானில் வெளியிடப்பட்டதாக ஒரு செய்தியை கேட்டோம். இந்த ஸ்மார்ட்போன் மக்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக அதே எக்ஸ்பீரியா வரிசையில் இரண்ட ஸ்மார்ட்போன்களை ஜப்பானில் வெளியிட்டுள்ளது சோனி நிறுவனம்.

எக்ஸ்பீரியா எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் ஜப்பானில் அறிமுகப்படுத்தி உள்ளது சோனி நிறுவனம். அது மட்டும் அல்லாமல் சோனி நிறுவனத்தின் இந்த 2

ஸ்மார்ட்போன்களும் சிறந்த 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோடிங் வசதியினை வழங்கும்.

இத்தகைய வேகத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் மற்ற தொழில் நுட்ப அம்சங்களும் என்ன என்பதையும் பார்க்கலாம். 95 கிராம் எடை கொண்ட இந்த எக்ஸ்பீரியா எஸ்எக்ஸ் ஸ்மார்ட்போன், 3.7 இஞ்ச் திரை வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன். இந்த விஷயம் ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு இனிமையான விஷயமாக இருக்கும்.

இதன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் கொண்டது.

எக்ஸ்பீரியா எஸ்எக்ஸ் ஸ்மார்ட்போனை காட்டிலும், எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் அதிக திரை வசதியினை கொண்டது.

இந்த எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் திரையினை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் வழங்கும்.

எக்ஸபீரியா எஸ்எக்ஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும். எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும்.

எக்ஸ்பீரியா எஸ்எக்ஸ் ஸ்மார்ட்போனில் பணபரிவர்த்தனைகள் செய்வதற்கும் இதன் தொழில் நுட்பங்கள் சிறந்த வகையில் சப்போர்ட் செய்வதாக தகவல்கள் கூறுகின்றது. எக்ஸ்பீரியா எஸ்எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8 ஜிபி மெமரி வசதியினையும், எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் கொண்டது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இனிமையான இசையை கேட்டு மகிழ வாக்மேன் அப்ளிக்கேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாவது பற்றி தகவல்களும், விலை விவரமும் கூடிய வரைவில் வெளியாகும். எக்ஸ்பீரியா வரிசையில் வெளியாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் சிறந்த தொழில் நுட்பத்திற்கு ஏற்ற விலையை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X