ஷாக் மேல் ஷாக்.. CMF Phone 1-ஐ வாங்கிய பயனர்களுக்கு அடுத்த நாளே வந்த 2 செய்திகள்.. என்னது?
இன்டர்சேஞ்சபிள் பேக் கவர் - அதாவது மாற்றக்கூடிய பேக் கவர்.. நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விட சற்றே வேறுபட்ட, மிகவும் தனித்துவமான டிசைன்.. எக்கச்சக்கமான எக்ஸ்ட்ரா அக்ஸசெரீஸ்கள் என சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஆனது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதேசமயம் சார்ஜருக்கு கூட தனியாக ரூ.1299 பணம் செலுத்த வேண்டுமா.. அதை இலவசமாக கொடுக்க கூடாதா? பெரும்பாலான போன்களில் மிகவும் சகஜமாக காணப்படும் டூயல் ஸ்பீக்கர்ஸ் இதில் இல்லையா.. வெறும் சிங்கிள் லவுட் ஸ்பீக்கர் தான் உள்ளதா? என்கிற விமர்சனங்களையும் பெற்றது.
சிஎம்எப் போன் 1 விற்பனைக்கு வரட்டும் அப்போது தெரிந்துவிடும் என்று காத்திருந்த பலருக்கும்.. முதல் விற்பனை தொடங்கிய அடுத்த நாளே 2 தரமான செய்திகள் காத்திருந்தது. முதல் செய்தி - சிஎம்எப் போன் 1-ஐ நம்பி வாங்கலாமா வேண்டாமா என்கிற சந்தேகத்தில் இருப்பவர்களுக்கான பதிலாக இருக்கிறது. இரண்டாவது செய்தி - சிஎம்எப் போன் 1-ஐ வாங்கிவர்களுக்கான சூப்பர் குட் நியூஸாக உள்ளது.

முதல் செய்தி என்னவென்றால்.. சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை தொடங்கிய வெறும் 3 மணி நேரத்தில் 1 லட்சம் யூனிட்கள் விற்கப்பட்டுள்ளதாக சிஎம்எப் நிறுவனம் கூறி உள்ளது. அதாவது சிஎம்எப் போன் 1-ஐ இந்தியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி உள்ளனர்.
இரண்டாவது செய்தி என்னவென்றால்.. விற்பனைக்கு வந்த அடுத்த நாளே சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான முதல் ஓடிஏ அப்டேட் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அப்டேட் 120எம்பி அளவில் உள்ளது. இது பல வகையான கேமரா மேம்பாடுகள், பக் பிக்ஸஸ் மற்றும் சில புதிய அம்சங்களை சிஎம்எப் போன் 1-க்கு கொண்டுவந்துள்ளது.
புதிய அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் ஓஎஸ்க்கான டிப்ஸ் & ஃபீட்பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செட்டிங்ஸ் > டிப்ஸ் & பீட்பேக் வழியாக அணுக கிடைக்கும். புதிய டேட் விட்ஜெட் சேர்க்கப்பட்டுள்ளது. உள்வரும் அறிவிப்புகளுக்கான புதிய ஸ்வைப்-டவுன் செயல்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது. இது உடனடி அணுகலுக்கான பாப்-அப் வியூவை வழங்கும். இது செட்டிங்ஸ் > சிஸ்டம் > பாப்-அப் வியூ வழியாக அணுக கிடைக்கும்
கேமராவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மேம்பாடுகளை பொறுத்தவரை, சில சூழ்நிலைகளில் மேம்படுத்தப்பட்ட ஜூம் கிளாரிட்டி, மேம்படுத்தப்பட்ட நைட் வியூ போட்டோ, விவிட் பயன்முறையில் இன்டர்பேஸ் மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெய்ட் மோட் போட்டோ எபெக்ட்ஸ், செல்பீ கேமராவின் நிறம் மற்றும் தோல் தொனி செயல்திறனை மேம்பாடு உட்பட பல மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான முதல் ஓடிஏ அப்டேட் வழியாக ஆண்ட்ராய்டு ஜூலை செக்யூரிட்டி பேட்ச்சும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது 2 வகையான ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அறிமுக சலுகை ஒரு பகுதியாக.. வங்கி சலுகைகளின் கீழ் சிஎம்எப் போன் 1-ன் பேஸிக் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது. சிஎம்எப் போன் 1-ன் அக்ஸசெரீஸ்களின் விலையை பொறுத்தவரை கேஸ் ரூ.1,499 க்கும், ஸ்டாண்ட் ரூ.799 க்கும், லேன்யார்ட் கேபிள் ரூ.799 க்கும், கார்டு கேஸ் ரூ.799 க்கும், 33W சார்ஜர் ரூ.1299 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








