டிவிட்டரை இலவசமாக மொபைலில் பயன்படுத்தலாம்!!!
டிவிட்டரை மொபைலில் இலவசமாக பயன்படுத்த புதிய சலுகையை வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆம், வோடபோனின் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரீபெய்ட் பயனாளிகள் டிவிட்டரின் மொபைல் வெர்சன் அப்ளிகேஷன் அல்லது டிவிட்டரின் வெப்சைட்டை மொபைல் மூலம் இலவசமாக பயன்படுத்தலாம்.
வோடபோன் நிறுவனம் டிவிட்டருடன் இணைந்து மூன்று மாதத்திற்க்கு இலவசமாக இந்து சலுகையை வழங்குகிறது. இந்து சலுகை நேற்றே ஆரம்பிக்கப்பட்டு விட்டன மற்றும் நவம்பர் 1 வரை இது இருக்கும்.
உங்கள் போனின் டேட்டா செட்டிங்கில் (APN)ஏபிஎன்யை 'WWW' என மாற்றி இந்த சலுகையை பயன்படுத்தலாம். பிளாக்பெரி மொபைல் வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்த முடியாது.
Click Here For New Smartphones, Tablets, Handsets And Gadgets Gallery

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
டிவிட்டரின் வெப்சைட்டை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். டிவிட்டரில் இருந்து வேறு எதாவது லிங்க் சென்றால் அது இலவசம் இல்லை. வேறு லிங்க் சென்றால் அதற்க்கு வழக்கம்போல் உங்கள் அக்கவுன்டில் இருந்து பணம் குறையும்.
இந்து சலுகையை ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் மூன்று மாதத்திற்க்கு இலவசமாக அதன் பயனாளிகளுக்கு வழங்கியது. இப்பொழுது டிவிட்டர் வோடபோனுடன் இணைந்துள்ளது.
இந்திய வோடபோன் டிவிட்டரில் கிட்டதிட்ட 95,000 பாலோயர்ஸ்களை கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் தங்களது சேவையை மேலும் மக்களிடம் பிரபலமாக்க இந்த முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications