டர்னிங் போன் கடான்ஸா: அதிநவீன வசதியுடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்
உலகில் இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக முதல்முறையாக டர்னிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.
இந்த அறிவிப்பு உலகின் அனைத்து ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.
பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??
அப்படி என்னதான் உள்ளது அந்த போனில் என்று பார்ப்போமா? வரும் 2017ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த போனில் ஸ்வார்ட்ஃபிஷ் ஓஎஸ் உள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு பிராஸசர்களா?
டர்னிங் போன் கடான்ஸா என்ற இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்னாப்டிராகன் 830 பிராஸசர் கொண்டுள்ளது என்றும் ஆனால் இரண்டு பிராஸசர்கள் எதற்கு? அதன் பணி என்ன என்பது குறித்த தகவல் இல்லை

இதில் எத்தனை ரேம் உள்ளது.
டர்னிங் போன் கடான்ஸா போனில் 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த அளவுக்கு கெப்பாசிட்டி உள்ள போன் உலகிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்க்ரீனில் அப்படி என்னதான் இருக்குது?
டர்னிங் போன் கடான்ஸா ஸ்மார்ட்போன் 5.8 இன்ச் அளவுக்கு டிஸ்ப்ளே உள்ளது. இதில் 2560x1440 பிக்சல் அளவுக்கு ரெசலூசன் உள்ளதால் ஸ்க்ரீன் மிக துல்லியாக இருக்கும்

20 எம்பி டூயல் முன்கேமிரா
60 MP கொண்ட பின்புற கேமிராவும், 20 MP கொண்ட செல்பி கேமிராவும் கொண்ட இந்த போனில் தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளது. அதுமட்டுமின்றி மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒரே போன். நான்கு சிம்கார்டுகள்
டர்னிங் போன் கடான்ஸா போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி உள்ளது. மேலும் நான்கும் நானோ சிம்கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி எப்படி?
டர்னிங் போன் கடான்ஸா ஸ்மார்ட்போனில் 100WH பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு அதில் சூப்பர்கண்டக்டர், மற்றும் லித்தியம் அயன் பேட்டரியும், ஹைட்ரஜன் செல்லும் உள்ளதால் இதன் சார்ஜ் உழைப்பு திறன் அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்புறம் வேற என்னவெல்லாம் இருக்குது?
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் போனை லாக் செய்யும் வசதி, வாய்ஸ் மூலம் போனை 'ஆன்' மற்றும் 'ஆப்' செய்யும் வசதி, ஆகியவை உள்ளது.
மேர்கண்ட தகவல் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல


Click it and Unblock the Notifications









