Home
Mobile

5கேமரா, 4சிம், 3ஒஎஸ், 2பேட்டரி, 5ஜி மோடம்: வாங்குனா இந்த போன வாங்கனும்.!

டூரிங் நிறுவனம் யாரும் ஏதிர்பார்க்க முடியாத ஒரு புதிய பியூட்சரிஸ்டிக் ஸ்மார்ட்போன் ஐ வடிவமைத்துள்ளது.

By Sharath

டூரிங் நிறுவனம் யாரும் ஏதிர்பார்க்க முடியாத ஒரு புதிய பியூட்சரிஸ்டிக் ஸ்மார்ட்போன் ஐ வடிவமைத்துள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐ பார்த்ததும் கண்டிப்பா வாங்கிவிட வேண்டுமென்று எண்ணும் வகையில் இதன் தோற்றம் இருக்கிறது.

தோற்றம் மட்டுமில்லாமல் இந்த புதிய டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் செயல்திறன்களும் இதில் பயன்படுத்தியுள்ள ப்ராஸஸ்ஸர் பற்றிய விபரங்களைக் கேட்டால் நிச்சயம் இந்த போன்-ற்காக காத்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன்

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன்

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் நம் அனைவரையும் வேறு ஒரு புதிய நிலைக்கே எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் 2020 ஆம் ஆண்டில் இரட்டை ஸ்னாப் 855 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்னோரு சிப்செட் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிரத்தியேக வன்பொருள் யுனிகார்ன் சேவை

பிரத்தியேக வன்பொருள் யுனிகார்ன் சேவை

டூரிங் நிறுவனம் ஸ்னாப் டிராகன் எக்ஸ்50 5ஜி மோடம் உடன் டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுமென்று தெரிவித்துள்ளது. இத்துடன் இதுவரை பயன்படுத்திடாத பிரத்தியேக வன்பொருள் யுனிகார்ன் சேவையை முதல் முறையாக பயன்படுத்தப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று இயங்குதளம்

மூன்று இயங்குதளம்

ஹப்பிள் போன் மூன்று இயங்குதளங்களைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் அண்ட்ராய்டு பி வெர்ஷன் பயன்படுத்தப்படும் மற்றும் 2020 இல் இருக்கும் சமீபத்திய இயங்குதளம் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். டூரிங் ஸ்மார்ட்போன் இல் மேல் டெக் இல் கெப்ளீரியன் இயங்குதளம் பயன்படுத்தப்படும் அத்துடன் ஸ்மார்ட்போன் இன் முதன்மை தளத்தில் இரண்டு இயங்குதளத்தின் கலவைகள் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 கேமரா

5 கேமரா

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் 5 x 12 மெகா பிக்சல் சிமோஸ் சென்சார் கேமரா அமைப்புடன் வருகிறது. 2 "டாப் டெக்" முன் கேமரா, 1 பின்புறம் "டாப் டெக்" கேமரா மாற்று 2 பின்புறத்தில் உள்ள மெயின் டெக் இல் என மொத்தம் 5 கேமராக்களுடன் களமிறங்குகிறது இந்த ஸ்மார்ட்போன். இரு தளங்களும் இரட்டை சிம் கார்டு வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது, எனவே இந்த ஸ்மார்ட்போன் ஒரே நேரத்தில் 4 சிம் கார்டுகளை இயக்கும் வல்லமை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தடுங் டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் கேமராகள் 15x ஆப்டிகல் ஜூம் சேவையுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

"உணர்ச்சி கண்டறிதல்(Emotional detection)"

டூரிங் ஹப்பிள் போன் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் லிப் வாசிப்பு திறன்னுடன் வருகிறது. "உணர்ச்சி கண்டறிதல்(Emotional detection)" என்னும் புதிய நுண்ணறிவு சேவை இதில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூப் சான்றிதழ் பெற்றது.

மூன்று தனி தனி திரை

மூன்று தனி தனி திரை

5.44 இன்ச் மற்றும் 5.41 அங்குல திரை மற்றும் 11.81 அங்குல அகலம் கொண்ட முக்கிய டெக் திரை என மூன்று தனி தனி அட்டகாசமான மூன்று பெரிய திரைகளுடன் வருகிறது டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன்.

சேமிப்பு & பேட்டரி

சேமிப்பு & பேட்டரி

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் இன் ஒவ்வொரு டெக்கிலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு சேவைக் கொண்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேல் டெக் இல் 2800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் மெயின் டெக் இல் 3300 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

ப்ரோடோ டைப் டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன்

ப்ரோடோ டைப் டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன்

டூரிங் ஹப்பிள் ஸ்மார்ட்போன் இன் ப்ரோடோ டைப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படி பட்ட ஸ்மார்ட்போன் நிச்சயம் வரவேற்கப்படும், ஆனால் இதன் விலை மட்டும் தான் நமக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இதன் விலை இன்றைய டாலர் பதிப்பின் படி ரூ.1.8 லட்சம் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Turing Claims New Turing Hubble Phone Will Have 2 X Snapdragon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X