உலகின் சிறந்த ஆன்டிராய்டு கருவியை பயன்படுத்த எளிய தந்திரங்கள்

By Meganathan
|

உலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்6 வெளியாகி அதன் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றது. தற்சமயம் சந்தையில் கிடைக்கும் சிறந்த ஆன்டிராய்டு கருவியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில சிறப்பம்சங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 பயன்படுத்த நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தந்திரங்களை பாருங்கள். இவை உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதோடு உபயோகமாகவும் இருக்கும்..

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

முன்பை போன்றே ஹோம் ஸ்கிரீனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இம்முறை மெதுவாக அழுத்தினாலே போதும் என்றாலும் இதை செட் செய்ய சிறிது நேரம் ஆகின்றது. இதற்கு செட்டிங்ஸ் -- லாக் ஸ்கிரீன் -- செக்யூரிட்டி -- பிங்கர் ப்ரின்ட்ஸ் சென்று கைரேகைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட் லாக்

கைரேகை ஸ்கேனர் இருந்தாலும் கேலக்ஸி எஸ்6 லாலிபாப் இயங்குதளத்தின் ஸ்மார்ட் லாக் அம்சத்தினை வழங்கியிருக்கின்றது, இதை லாக் ஸ்கிரீன் மற்றும் செக்யூரிட்டி மெனுவில் பயன்படுத்த முடியும்.

ஹோம் ஸ்கிரீன்

ஹோம் ஸ்கிரீன்

டச்விஸ் லான்ச்சர் மூலம் கேலக்ஸி எஸ்6 கருவியின் ஹோம் ஸ்கிரீனினை மாற்றியமைத்து கொள்ள முடியும். ஆனால் இதில் மற்ற செயலிகளை போன்று அதிக அம்சங்கள் வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

ப்ரீஃபிங் ஸ்கிரீன்

ப்ரீஃபிங் ஸ்கிரீன்

ஃப்ளிப்போர்டு மூலம் சக்தியூட்டப்பட்ட சாம்சங்கின் நியுஸ் ஃபீடு பக்கம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. கேலக்ஸி எஸ்6 கருவியில் ப்ரீஃபிங் என்றழைக்கப்படும் இந்த அம்சத்தினை நீக்க ஹோம் ஸ்கிரீனினை அழுத்தி பிடித்து ப்ரீஃபிங் ஆப்ஷனை எடுத்து விடலாம். மீண்டும் இந்த சேவையை பயன்படுத்த மீண்டும் அதே ஆப்ஷன் சென்று செக் பாக்ஸை க்ளிக் செய்தால் போதுமானது.

பில்ட் இன் ஆப்ஸ்

பில்ட் இன் ஆப்ஸ்

இம்முறை சாம்சங் நிறுவனம் பிலிட் இன் அப்ளிகேஷன்களை வெகுவாக குறைத்திருக்கின்றது. இருந்து சில பில்ட் இன் அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால் செய்ய செட்டிங்ஸ் -- அப்ளிகேஷன் -- அப்ளிகேஷன் மேனஜர் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

வாய்ஸ் டிடெக்ஷன்

வாய்ஸ் டிடெக்ஷன்

ஒரு வேலை எஸ் வாய்ஸ் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கேலக்ஸி எஸ்6 கருவியில் கூகுளின் வாய்ஸ் கமான்டு சேவையை பயன்படுத்தலாம். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- வாய்ஸ் -- கூகுள் டிடெட்கஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

டச்விஸ் அம்சத்தில் பயனுள்ளதாக இருப்பது நோட்டிபிகேஷனில் இருக்கும் டாஃகிள்கள் தான். ஆன்டிராய்டின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும் இந்த டாஃகிள்களை மாற்ற மேல்புறம் இருக்கும் எடிட் பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு ஏற்றவாரு அதனினை மாற்றியமைத்து கொள்ளலாம்.

க்விக் செட்டிங்ஸ்

க்விக் செட்டிங்ஸ்

கேலக்ஸி எஸ்6 கருவியின் செட்டிங்ஸ் மெனுவில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்விக் செட்டிங்ஸ் ஆப்ஷனில் நீங்கள் அதிகளவில் பயன்படுத்திய ஆப்ஷன்களை மெயின் செட்டிங்ஸ் மெனுவில் பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
here you will find the tricks to get the most out of your Samsung Galaxy S6. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X