கடந்த வாரம் முதல் அதிகமாக பிரபலமடைந்துள்ள ஸ்மார்ட்போன்கள் எவை என தெரியுமா?

|

இந்த மாத துவக்கத்தில், எம்டபிள்யூசி 2018 டெக் ஷோவில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ போன்ற தனது சமீபகால முன்னணி தயாரிப்புகளின் மூலம் சாம்சங் நிறுவனம், அதிக பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் ஏற்க தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் முதல் அதிகமாக பிரபலமடைந்துள்ள ஸ்மார்ட்போன்கள் எவை என தெரி

மேலும் சர்வதேச சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கேலக்ஸி எஸ் 9 டியோ-வை, சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 6 போன்றவை பின்னுக்கு தள்ளியுள்ளன.

இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரெட்மீ நோட் 5 ப்ரோ, அந்நிறுவனத்தின் உள்ளூர் சந்தையான சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டை ஒட்டி ஒன்பிளஸ் 6 அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளது.

இந்நிலையில் ஐபோன் எக்ஸில் உள்ளது போல டிஸ்ப்ளேயில் மேம்பட்ட தன்மை உடன் ஒன்பிளஸ் 6 காணப்படலாம் என்ற வதந்திகள் மற்றும் செய்தி கசிவுகளை நாங்கள் பெற்று வருகிறோம்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips

மேற்கூறிய இந்த ஸ்மார்ட்போன்களை தவிர, சியாமி ரெட்மீ நோட் 5, சாம்சங் கேலக்ஸி எஸ்8, மீ ஏ1, கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் ஜே7 பிரைம் ஆகியவை கூட இந்த பிரபலமடைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மற்றபடி, எம்டபிள்யூசி 2018 இன் மூலம் சந்தைக்கு புது வரவுகளான நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் அசஸ் சென்ஃபோன் 5இசட் உள்ளிட்டவை குறித்து கடந்த வாரத்தில் அதிகளவில் பேசப்பட்டது.

சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

சிறந்த விலையில் கிடைக்கும் சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

 • 5.99 இன்ச் எஃப்ஹெச்டி+ தொடு திரை டிஸ்ப்ளே
 • 1.86ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 செயலி
 • 4ஜிபி/6ஜிபி ரேம் உடன் 64ஜிபி ரோம்
 • ஹைபிரிடு இரட்டை சிம்
 • 12எம்பி + 5 எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரட்டை டோன் ஃபிளாஷ்
 • 20எம்பி முன்பக்க கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ்
 • 4ஜி வோல்டி
 • வைஃபை
 • ப்ளூடூத் 4.2
 • 4000 எம்ஏஹெச் பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி எஸ்9

  சாம்சங் கேலக்ஸி எஸ்9

  சிறந்த விலையில் கிடைக்கும் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

  முக்கிய அம்சங்கள்

  • 5.8 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் ஆமோல்டு டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் எக்ஸிநோஸ் 9810/ஸ்னாப்டிராகன் 845 செயலி
  • 4ஜிபி ரேம் உடன் 64/128/256ஜிபி ரோம்
  • வைஃபை
  • என்எஃப்சி
  • ப்ளூடூத்
  • இரட்டை சிம்
  • இரட்டை பிக்சல் 12எம்பி பின்பக்க கேமரா
  • 8எம்பி முன்பக்க கேமரா
  • கண் கருவிழி ஸ்கேனர்
  • கைரேகை
  • ஐபி68
  • 3000 எம்ஏஹெச் பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி எஸ்9+

   சாம்சங் கேலக்ஸி எஸ்9+

   சிறந்த விலையில் கிடைக்கும் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

   முக்கிய அம்சங்கள்

   • 6.2 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் ஆல்மோடு டிஸ்ப்ளே
   • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9810/ஸ்னாப்டிராகன் 845 செயலி
   • 6ஜிபி ரேம் உடன் 64/128/256ஜிபி ரோம்
   • வைஃபை
   • என்எஃப்சி
   • ப்ளூடூத்
   • இரட்டை சிம்
   • இரட்டை பிக்சல் 12எம்பி பின்பக்க கேமரா
   • 8எம்பி முன்பக்க கேமரா
   • கண் கருவிழி ஸ்கேனர்
   • கைரேகை
   • ஐபி68
   • 3500 எம்ஏஹெச் பேட்டரி
   • சியாமி ரெட்மீ நோட் 5

    சியாமி ரெட்மீ நோட் 5

    சிறந்த விலையில் கிடைக்கும் சியாமி ரெட்மீ நோட் 5

    முக்கிய அம்சங்கள்

    • 5.99-இன்ச் முழு ஹெச்டி+ 18: 9 டிஸ்ப்ளே
    • 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி
    • 3ஜிபி/4ஜிபி ரேம் உடன் 32ஜிபி/64ஜிபி ரோம்
    • இரட்டை சிம்
    • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 12எம்பி பின்பக்க கேமரா
    • ஃபிளாஷ் உடன் கூடிய 5எம்பி முன்பக்க கேமரா
    • 4ஜி
    • ப்ளூடூத் 4.2
    • கைரேகை சென்ஸர்
    • இன்ஃப்ராரெட் சென்ஸர்
    • 4000எம்ஏஹெச் பேட்டரி
    • ஒன்பிளஸ் 6

     ஒன்பிளஸ் 6

     வதந்தியாக கூறப்படும் முக்கிய அம்சங்கள்

     • 1440 x 2880 பிக்சல் திரை பகுப்பாய்வு உடன் கூடிய ஒரு 6.0 இன்ச் திறனுள்ள தொடு திரை. ஆமோல்டு டிஸ்ப்ளே வகை (கார்னிங் கொரில்லா கிளாஸ் 5).
     • ஆக்டா கோர் செயலி, அட்ரினோ ஜிபியூ உடன் இணைந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 845
     • 6/8 ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி நினைவகம் என்பது வழக்கமாக அளிக்கப்படும் நினைவக கொள்ளளவு ஆகும்
     • 16 எம்பி + 12 எம்பி இரட்டை கேமரா
     • 16 எம்பி கேமரா செல்பீ கேமரா
     • அவிழ்க்க முடியாத லி-போ 3950 எம்ஏஹெச் பேட்டரி
     • சாம்சங் கேலக்ஸி எஸ்8

      சாம்சங் கேலக்ஸி எஸ்8

      சிறந்த விலையில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்8

      முக்கிய அம்சங்கள்

      • 5.8 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் ஆமோல்டு டிஸ்ப்ளே
      • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835 செயலி
      • 4/6ஜிபி ரேம் உடன் 64/128ஜிபி ரோம்
      • வைஃபை
      • என்எஃப்சி
      • ப்ளூடூத்
      • இரட்டை சிம்
      • இரட்டை பிக்சல் 12 எம்பி பின்பக்க கேமரா
      • 8எம்பி முன்பக்க கேமரா
      • கண் கருவிழி ஸ்கேனர்
      • கைரேகை
      • 3000 எம்ஏஹெச் பேட்டரி
      • சியாமி மீ ஏ1

       சியாமி மீ ஏ1

       சிறந்த விலையில் கிடைக்கும் சியாமி மி ஏ1

       முக்கிய அம்சங்கள்

       • 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி 2.5டி வளைந்த கிளாஸ் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 450நிட் ஒளிர்வு, 1000:1 பேதம் காட்டும் விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
       • 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் செயலி உடன் 650எம்ஹெச்இசட் அட்ரினோ 506 ஜிபியூ
       • 4ஜிபி ரேம்
       • 64ஜிபி நினைவகம் (இஎம்எம்சி 5.0)
       • மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்
       • ஆன்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்), ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ)-க்கு மேம்படுத்த முடியும்
       • ஹைபிரிடு இரட்டை சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி)
       • விரிந்த கோணத்தில் அமைந்த லென்ஸ் உடன் கூடிய 12எம்பி பின்பக்க கேமரா
       • டெலிபோட்டோ லென்ஸ் உடன் கூடிய இரண்டாவது 12எம்பி கேமரா
       • 5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
       • 4ஜி வோல்டி
       • 3080எம்ஏஹெச் (வழக்கமாக) / 3000எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி
       • சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரே

        சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரே

        சிறந்த விலையில் கிடைக்கும் கேலக்ஸி ஜே7 ப்ரோ

        முக்கிய அம்சங்கள்

        • 5.5 இன்ச் எஃப்ஹெச்டி சூப்பர் ஆமோல்டு டிஸ்ப்ளே
        • 1.6ஜிஹெச்இசட் எக்ஸினோஸ் 7870 ஆக்டா-கோர் செயலி
        • 3ஜிபி ரேம் உடன் 64ஜிபி ரோம்
        • இரட்டை நானோ சிம்
        • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி கேமரா
        • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி முன்பக்க கேமரா
        • 4ஜி எல்டிஇ/வைஃபை
        • சாம்சங் பே
        • ப்ளூடூத் 4.1
        • 3600எம்ஏஹெச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apart from these smartphones, the Xiaomi Redmi Note 5, Samsung Galaxy S8, Mi A1, Galaxy J7 Pro and J7 Prime have also occupied spots in the trending smartphones list. The others those were talked about last week are the newcomers we saw at the MWC 2018 including the Nokia 8 Sirocco, Nokia 7 Plus and Asus ZenFone 5Z.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X