சந்தையை ஆட்டிப்படைக்கும் Realme: 5ஜி உடன் மீண்டும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

|

ரியல்மி நிறுவனம் Realme V23i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.56 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. மிட் ரேன்ஜ் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் கொண்டிருக்கிறது.

Realme V23i ஸ்மார்ட்போனானது சைலண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.56 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவு இதில் இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்ட 13 எம்பி ஏஐ ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

சந்தையை ஆட்டிப்படைக்கும் Realme: 5ஜி உடன் மீண்டும் ஒரு புதிய போன்!

Realme V23i விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.24,000) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரியல்மி இன் இந்த ஸ்மார்ட்போனானது Far Mountain Blue மற்றும் Jade Black வண்ண விருப்பத்தில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியா உட்பட பிற சந்தைகிளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

Realme V23i சிறப்பம்சங்கள்

Realme V23i சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.56 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரவுக்கு என Realme V23i ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு இருக்கிறது. அதாவது 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.செல்பி ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. Realme V23i ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் வேகம் குறித்த விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை.

Realme நிறுவனம், கடந்த வாரம், Realme 10 Pro தொடர் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. Realme 10 Pro சீரிஸ் வரிசையில் தற்போது Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. Realme 10 Pro+ என்பது கர்வுடு டிஸ்ப்ளே பேனலைக் கொண்ட நிறுவனத்தின் முதல் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சந்தையை ஆட்டிப்படைக்கும் Realme: 5ஜி உடன் மீண்டும் ஒரு புதிய போன்!

இதில் ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் லுக் ஆனது உயர்தர ப்ரீமியம் ஸ்மார்ட்போனுக்கு இணையாக இருக்கிறது. Realme 10 Pro+ 5G போனின் விலையைப் பற்றிப் பேசுகையில், இதன் 6GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 24,999 விலையில் வருகிறது. அதேபோல், இதன் 8GB + 128GB வேரியண்ட் மாடலின் விலை ரூ. 25,999 எனவும் 8GB + 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 27,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 10 ப்ரோ+ இன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.7-இன்ச் OLED முழு HD+ தெளிவுத்திறன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் + 360Hz டச் சாம்பிளிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 108MP + 8MP + 2MP சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி உடன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Pic: Social Media

Best Mobiles in India

English summary
Treat For Realme Fans: Mid Range Price Realme V23i Launched with 5G support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X