வேறு நெட்வொர்க் மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்-டிராய் அதிரடி.!

ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது.

|

ஜியோ நிறுவனம் வந்த பின்பு மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வருமானம் அதிகமாகவே குறையத் தொடங்கியது, குறிப்பாக ஜியோ நிறுவனம் ஆரம்பத்தில் பல்வேறு இலவச சலுகைகள் மற்றும் சிறப்பான திட்டங்களை அறிவித்தது, பின்பு இந்தியாவில் மற்ற நிறுவனங்களை விட பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ஜியோ நிறுவனம்.

வேறு நெட்வொர்க் மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்-டிராய்.!

தற்சமயம் டிராய் (தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு சார்பில் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, இந்த அறிவிப்பு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது என்று கூறவேண்டும்.

டிராய்

டிராய்

இப்போது செல்போன் எண் மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் முறையை (MNP)மேலும்
எளிமைப்படுத்த டிராய் அமைப்பு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

இரண்டு நாட்கள்

இரண்டு நாட்கள்

இந்த புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும். இதற்கு முன்று வரை 7நாட்கள் வரை ஆகும்.

நான்கு நாட்கள்

நான்கு நாட்கள்

பின்பு மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4நாட்கள் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, முன்னதாக இந்த முறைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மேலும் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, உங்களது விண்ணப்பத்தை
நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரூ.30 ரீசார்ஜ்

ரூ.30 ரீசார்ஜ்

ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று
வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது. பின்னர், டிராய் தலையிட்டதால் அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
TRAI reduces mobile number porting time to 2 days within same circle: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X