அடிச்சான் பாரு OPPO.. ரூ.13,000 பட்ஜெடில் மிலிட்டரி-கிரேட் 5G போன்.. ரூ.1000 ஆபர் விலையில் விற்பனை!
வெறும் கேமராக்களை வைத்து மட்டுமே.. இந்திய மொபைல் சந்தையில் வண்டி ஒட்டிவிட முடியாது என்பதை ஒப்போ நிறுவனம் சற்றே தாமதமாக புரிந்து கொண்டாலும், சரியான நேரத்தில் புரிந்து கொண்டுள்ளது. பட்ஜெட்-விலையில் யாரெல்லாம் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறார்களோ அவர்கள் தான் இங்கே மார்க்கெட் ராஜா என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த போட்டிக்கு ஒப்போ நிறுவனம் தயாராகி விட்டதை உணர்த்தும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது, அது ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) மாடலாகும்.
சீனாவில் அறிமுகமான சில மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் "வழக்கம் போல" கேமரா அம்சங்களில் கவனம் செலுத்தும் ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இது ரூ.15,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் கடினமான 5ஜி ஸ்மார்ட்போனாகும். இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனை மட்டுமின்றி, MIL-STD-810H மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி பாலிகார்பனேட் பாடியையும் கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட், 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5100mAh பேட்டரி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, 32எம்பி ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலை? இதோ விவரங்கள்:
என்ன விலை? ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஆகஸ்ட் 2) முதல் தொடங்குகிறது. இது பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஸ்டோர் வழியாக ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.ரூ.12,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை (HDFC Bank, SBI and Axis Bank cards) பயன்படுத்தி ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.1000 உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் 3 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பதையும் பெறலாம்.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1000 nits peak brightnes), பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் (Panda Glass protection) உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 அனுப்பப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது 2எம்பி போர்ட்ரெய்ட் சென்சிங் யூனிட்டுடன் 32எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh செல்லை பேக் செய்கிறது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் Uயூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் MIL-STD-810H இராணுவ தர நீடித்து நிலைத்திருக்கும் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 186 கிராம் ஆகும், அளவீட்டில் இது 7.68 மிமீ தடிமன் உள்ளது!


Click it and Unblock the Notifications








