ஜோடி போடலாமா ஜோடி! Xiaomi Vs iQoo.. நல்ல போன் வேணும்னா டிசம்பர் 8 வரை காத்திருங்கள்.!

|

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போனானது டிசம்பர் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் மறைவு காரணமாக, இந்த வெளியீடு பிந்தைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சியோமி தற்போது சியோமி 13 சீரிஸை டிசம்பர் 8 2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என ஒரு டீஸரை பகிர்ந்துள்ளது. இதே தினத்தில் சியோமி இன் தலைமை போட்டியாளராக இருக்கும் ஐக்யூ நிறுவனமும் ஐக்யூ 11 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Xiaomi Vs iQoo

Xiaomi Vs iQoo

Xiaomi 13 சீரிஸ் இல் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. iQOO 11 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதே சிப்செட் தான் சியோமி 13 சீரிஸ் இல் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் இரண்டு ஸ்மார்ட்போனும் ஒரே தேதியில் அறிமுகமாக இருப்பதால் இரண்டுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 13 சீரிஸ் Vs iQOO 11 சீரிஸ்

Xiaomi 13 சீரிஸ் Vs iQOO 11 சீரிஸ்

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அசுரத் தனமான வளர்ச்சி அடைந்து இருக்கிறது iQOO. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்களில் கேமிங் அம்சங்களுக்கு பெரிதளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. Xiaomi 13 சீரிஸ் மற்றும் iQOO 11 சீரிஸ் ஆனது நேரடி போட்டியை எதிர் கொள்ள இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இரண்டு போனுக்கும் கடுமையான போட்டி

இரண்டு போனுக்கும் கடுமையான போட்டி

இரண்டு ஸ்மார்ட்போனிலும் ஒரே சிப்செட் இடம்பெறும். அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போனும் சாம்சங்கின் E6 பிளாட் மற்றும் வளைந்த AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இரண்டுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒரே தினத்தில் வெளியாக இருக்கிறது.

புதிய சியோமி ஸ்மார்ட்போன்

புதிய சியோமி ஸ்மார்ட்போன்

புதிய சியோமி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பல ஆய்வாளர்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை வெளியிட்டு வருகின்றனர். அனைத்து தகவல்களிலும் இந்த ஸ்மார்ட்போன் 2023 இல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சியோமி பணியை தீவிரப்படுத்தியதால் இந்த போன் குறிப்பிட்ட தினத்தை விட முன்னதாகவே அறிமுகமாக இருக்கிறது.

Xiaomi 13 சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். சியோமி 13 சீரிஸ் இல் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு மாடல்களிலும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.2 இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது.

50 எம்பி சோனி IMX கேமரா

50 எம்பி சோனி IMX கேமரா

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குவால்காம் இன் மிகவும் சமீபத்திய சக்தி வாய்ந்த சிப்செட் ஆகும். Xiaomi 13 சீரிஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX989 1-இன்ச் முதன்மை சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS ஆதரவை கொண்டிருக்கும்.

0 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்

0 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்

இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது. அதன்படி 50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

Xiaomi 13 Pro மாடலில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4800 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயூஐ 13 மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. Xiaomi 13 சமீபத்தில் BIS (Bureau of Indian Standards) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tough Competion between Xiaomi Vs iQoo: If you want a good phone, wait till December 8.!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X