2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?

By Prakash
|

இந்த ஆண்டு தலை சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தைக்கு வந்துள்ளது, மேலும் இப்போது புதிய தொழில்நுட்பம் கொண்டு அதிக ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. இப்போது வந்துள்ள கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பு செயல்திறன்களை கொண்டுள்ளது, அதன்பின் ஐபோன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது இந்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள்.

இப்போது அமேசான் வலைதளத்தில் சிறப்பு விலைகுறைப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்போது 2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8 பொறுத்தவரை அமேசான் வலைதளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
சாதனத்தின் முந்தைய விலை ரூ.64,000-ஆக இருந்தது. இப்போது ரூ.4000 விலை குறைக்கப்பட்டு ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிஇ விண்வெளி சாம்பல் மற்றும் தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

இந்த சாதனத்தை அமேசான் வலைதளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும். ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் முந்தைய
விலை ரூ.73,000-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.69,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கமெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின் அமேசான்
வலைதளத்தில் இக்கருவியை ரூ.67.900-விலையில் வாங்க முடியும்.

எச்டிசி யு11:

எச்டிசி யு11:

எச்டிசி யு11 ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.51,990-ஆக உள்ளது.

 சாம்சங் கேலக்ஸி  எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் எக்ஸிநோஸ் 8895 செயலிஇவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 5.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்ம சாதனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல்ரூ.53,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி  எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பாதுவாக 12எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸிநோஸ் 8895 செயலிஇவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 6.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்ம சாதனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல்ரூ.60,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7 சாதனம் 32ஜிபி ரூ.39,999 விலையில் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாகவாங்க முடியும். 12எம்பி ரியர் கேமரா மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவருகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பொறுத்தவரை கேமரா மற்றும் டிஸ்பிளே வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும். இந்த
சாதனம் 128ஜிபி ரூ.61,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2(64ஜிபி) ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.42,233-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .இக்கருவி 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிக்சல் 2  எக்ஸ்எல்

பிக்சல் 2 எக்ஸ்எல்

பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.55,248-ஆக உள்ளது. இக்கருவி 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Top smartphones for Diwali 2017 Apple iPhone 8 iPhone 7 Galaxy Note 8 and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X