Home
Mobile

ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையைப் பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை லைஃப் பிராண்டு இல்லாத பல்வேறு இதர நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது டேட்டா கட்டணங்களைக் குறைத்து வருகின்றது. தற்சமயம் வரை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் பிரீவியூ எனப்படும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது. என்றாலும் முதல் மூன்று மாதங்களுக்கு அன்-லிமிட்டெட் 4ஜி டேட்டா, வாய்ஸ்கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை வழங்குவதால் இதற்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து ஜியோ சிம்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையைப் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

இந்திய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெற வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிட மற்றும் அடையாள சான்று போன்றவற்றை ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களில் வழங்கிப் பெற முடியும். சிம் கார்டு இலவசமாக வழங்கப்பட்டாலும் ஜியோ 4ஜி சேவையானது வரையறுக்கப்பட்ட சில கருவிகளில் மட்டுமே வேலை செய்கின்றது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையை ஒத்துழைக்கும் தலைசிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் எவை எனத் தெரியுமா.??

 சாம்சங் கேலக்ஸி ஜெ1

சாம்சங் கேலக்ஸி ஜெ1

அம்சங்கள் : 4.3 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் கார்டெக்ஸ் பிராசஸர், 5.0 எம்பி பிரைமரி கேமரா, 4ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 1850 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2016)

சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2016)

அம்சங்கள் : 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்5 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்5 பிளஸ்

அம்சங்கள் : 5.1 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 16 எம்பி பிரைமரி கேமரா, 16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 ஜிபி ரேம் மற்றும் 2800 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ7

சாம்சங் கேலக்ஸி ஏ7

அம்சங்கள் : 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 ஜிபி ரேம் மற்றும் 2600 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கோர் பிரைம் 4ஜி

சாம்சங் கேலக்ஸி கோர் பிரைம் 4ஜி

அம்சங்கள் : 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன் 7

சாம்சங் கேலக்ஸி ஆன் 7

அம்சங்கள் : 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன் 5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன் 5 ப்ரோ

அம்சங்கள் : 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 8 எம்பி பிரைமரி கேமரா, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 ஜிபி ரேம், 2600 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் கேலக்ஸி ஏ8

அம்சங்கள் : 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் குவாட் கோர் பிராசஸர், 16 எம்பி பிரைமரி கேமரா, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 ஜிபி ரேம் மற்றும் 3050 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் கேலக்ஸி நோட் 5

அம்சங்கள் : 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எக்சைனோஸ் பிராசஸர், 4ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல்

பட்டியல்

சாம்சங் அல்லாத பல்வேறு இதர கருவிகளுக்கும் ஜியோ 4ஜி சேவை சப்போர்ட் செய்யும் என்பதோடு, தினமும் இந்தப் பட்டியல் நீட்டிக்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இந்தப் பட்டியலோடு சேர்த்து பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களின் டேட்டா சேவை கட்டணம் குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top Samsung Smartphones that support Reliance Jio Preview Offer Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X