"வாழ்க்கையின் அற்புத காட்சி"- படைப்பாளராக ரெனோ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்: கன்டென்ட் கிரியேட்டர்களே உயிர்த்து எழு!

|

கன்டென்ட் கிரியேட்டர்கள் இந்த புதிய யுகத்தின் "கதை சொல்பவர்களாக இருக்கின்றனர்". டிஜிட்டல் தளங்களில் இருக்கும் கிரியேட்டர்கள் நிகழ்வு உருவாக்கம், கேமராக்கள், புகைப்படம் எடுத்தல் போன்ற நவீன தொழில்நுட்ப வழிமுறை குறித்து கவனம், அர்ப்பணிப்பு, இது சார்ந்த அறிவை அறிந்துக் கொள்வது கட்டாயமாக இருக்கிறது. குறிப்பாக புது யுகத்தின் கிரியேட்டர்களுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற பிரபல டிஜிட்டல் ஊடகங்களில் பரந்த கவனங்களை பெறுவதற்கு சாதகமான உபகரணங்கள் தேவை.

இதற்கு ஏற்ற குறிப்பிடத்தக்க வகையில் ஸ்மார்ட்போன்கள் படிப்படியாக மிகவும் சக்திவாய்ந்த வீடியோ கிராஃபி அம்சத்தோடு வருகிறது. அன்றாட நிகழ்வுகளை காட்சிப்படுத்த மட்டுமல்ல வெகுஜனங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் நிபுணத்துவ தொழில்நுட்பம் கூட சந்தையில் கிடைக்கிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணற்ற விருப்பங்களுக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகமான ரெனோ 5 ப்ரோ 5ஜி தொழில்முறை தர முடிவுகளை அடைவதற்கு ஆல்ரவுண்டர் வீடியோ கிராஃபி ஸ்மார்ட்போன் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும் கேமரா அமைப்பு மிகுவம் மேம்பட்ட முறையில் இருக்கிறது. இந்தியாவின் புதுயுக வீடியோ படைப்பாளர்கள் இரண்டு பேர்., ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் இந்தியாவின் ஆராயப்படாத இடங்களை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

ஒப்போ & டிஸ்கவரி இணைந்து வாழ்க்கை பயணத்துடன் கைகோர்த்து. இது "Life UnSeen" என்ற தலைப்பில் இரண்டு அழகான வீடியோக்களின் மூலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. புதுயுக உள்ளடக்க படைப்பாளர்கள் இருவரான கணேஷ் வனாரே மற்றும் அனுனே சூட் ஆகியோர் அழகான நிலப்பரப்பு, சண்டாக்பூ மற்றும் குர்ஷியாங் மக்கள் (people of Sandakphu and Kurseong) முறையை கைப்பற்ற லைப் அன்சீன் என்ற தலைப்பிற்கு ரெனோ 5 ப்ரோ 5ஜி சாதனத்தை தேர்வு செய்தனர்.

முதல் வீடியோ கணேஷ் வனாரே சண்டக்பூவின் நிலப்பரப்பு மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தை ஆராய இந்த சாதனத்தை பயன்படுத்தினார். இதை நீங்கள் இந்த வீடியோவில் காண முடியும்.

வீடியோ மூலம் கணேஷ் தனது ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி உடன் சண்டக்பூவுக்கு ஒரு வழி பயணத்தில் புறப்படுகிறார். இது உலகின் மிக உயர்ந்த சிகரங்கள், எவரெஸ்ட், காஞ்சன்ஜங்கா, லோட்ஸே மற்றும் சண்டக்பூ பகுதியை சேர்ந்த மக்காலூ ஆகியோர்களின் வாழ்க்கை முறையை அழகிய காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.

அவர் மலையடிவார வீடியோவை பதிவு செய்வதற்கு ஏஐ பட்டனை தட்டுவதன் மூலம் மிருதுவான, பிரகாசமான வீடியோக்களை பதிவு செய்கிறது. மலை தொடர்களை அழகாக ஆராய்ந்து இயற்கை சூழலை காட்சியாக பதிவு செய்கிறது.

இந்த வீடியோவின் ஒரு பகுதியாக இரண்டாவது காட்சி மேற்கு வங்காளத்தின் சூர்சொங் என்ற சிறிய நகரத்தின் வனப்பகுதியை ஆராய்ந்து அதை மையமாக வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம்பமுடியாத., நாட்டின் தொலைதூர இடங்களில் மறைந்திருக்கும் இயற்கை புதையல்களை ஆராய்வதற்கு இந்த தொழில் வல்லுநர்கள் சமீபத்தில் ரெனோ தொடர் சாதனத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கான காரணத்தை பார்க்கலாம்.

தொழில்முறை தர முடிவுகளுக்கான ஏஐ சிறப்பம்ச வீடியோ

உள்ளடக்க படைப்பாளர்கள் விதிவிலக்கான பயனர் அனுபவத்தை வழங்குவதற்கு ரெனோ தொடர் சாதனம் புதிய வீடியோ கிராஃபி வரைமுறை அனுபவத்தை வழங்குகிறது. மென்பொருளால் இயக்கப்படும் கணக்கீட்டு வீடியோகிராஃபி மூலமாக சிறந்த வன்பொருள் அம்சம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதேபோல் வீடியோ தரம் மற்றும் மேம்பட்ட சக்சி வாய்ந்த அனுபவத்திற்கு சிறந்த கேமரா வன்பொருள் ஸ்மார்டான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. ஏஐ ஹைலைட் வீடியோ ஸ்மார்ட் தொழில்முறை வீடியோ பதிவு சாதனமாக இது இருக்கிறது. ஏஐ ஹைலைட் வீடியோ அம்சம் முதல் வகையான தொழில் முன்னணி முழு பரிமாண இணைவு உருவப்பட வீடியோ அமைப்பு மூலம் ஆதரிக்கப்படுகிறது. பயணத்தின் ஒருவர் கைப்பற்றக் கூடிய அனைத்து வகையான சூழலுக்கு உதவும் வகையான ஒரு தொழில்நுட்பம். இந்தியாவின் மிக அழகிய இடங்களில் பார்வையை ஈர்க்கக் கூடிய உள்ளடக்கத்தை உருவாக்க படைப்பாளர்க்கு இந்த அம்சம் உதவுகிறது. நிலப்பரப்பு, உருவப்படம், பகுதி உள்ளிட்ட குறைந்த ஒளி வீடியோகிராஃபி தொழில்நுட்பத்திலும் ரெனோ 5 ப்ரோ 5ஜி சாதமாக சிறந்த வெளியீட்டை வழங்குவதில் உறுதி செய்கிறது.

உதாரணமாக சண்டக்பூவின் தொலைதூரப் பகுதிகளில் கடுமையான வெளிச்சத்தை கண்டறிந்தால் ஏஐ லைட் வீடியோ தானாகவே லைவ் எச்டிஆர் வழிமுறையை செயல்படுத்துகிறது. பிரகாசமான சூரிய ஒளிக்கு எதிராக வீடியோக்களை பதிவு செய்யும் போது ரெனோ 5ப்ரோ பூர்வீக மக்களின் மறைக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் பள்ளத்தாக்கில் உள்ள உண்மையான வெளிச்சம், வண்ணங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. கணேஷ் கைப்பற்றப்பட்ட நேரடி எச்டிஆர் பயன்முறையான பல்வேறு அம்சங்களுக்கு அனுமதிக்கிறது. இந்த பயன்முறையானது பிரகாசம், வண்ண அதிர்வு மற்றும் மோசமான வெளிச்சம் தரும் காட்சிகளை மேம்படுத்த அனுமதிக்கிறது. படைப்பாளர்களுக்கு தெளிவான ஆச்சரியமளிக்கும் புகைப்படங்களை இது வழங்கும் என்பதில் இந்த அம்சங்கள் உறுதி செய்கிறது.

விளையாட்டு மற்றும் அல்ட்ரா நைட் பயன்முறை விவரங்கள்

அல்ட்ரா நைட் மோட் துல்லியமான விவரங்களையும் வண்ணத்தையும் கொடுக்கிறது

இந்த சாதனம் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். அதேசமயம் ரெனோ 5 ப்ரோ 5ஜி ஆனது புகைப்படக் கலைஞர்களுக்கு சிறந்த பயணத் துணையாக இருக்கிறது. அதாவது பயணத்தின் போது துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க இந்த சாதனம் பெரிதும் உதவும் என்றே கூறலாம். மேலும் ரெனோ 5 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது AI ஹைலைட் வீடியோ-அல்ட்ரா நைட் மோட் வசதியைக் கொண்டுள்ளது, எனவே இது குறைந்த வெளிச்சத்திலும் கூட துல்லியமான வீடியோக்களை பதிவு செய்ய உதவுகிறது. அதுவும் இந்த AI ஹைலைட் வீடியோ அல்ட்ரா நைட் மோட் வசதி குறிப்பிட்ட இடம் அல்லது பொருட்களின் விவரத்தையும், வண்ணத்தையும் அப்படியே பதிவு செய்யும் ஆற்றல் கொண்டது. AI ஹைலைட் வீடியோ-அல்ட்ரா நைட் மோட் வசதி இருப்பதால் இந்த சாதனத்தை அதிகளவு மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இரவில் உங்களது எல்லா வீடியோக்களும், செல்பீகளுக்கும் இந்த புதிய வசதி மிகவும் அருமையாகவே உதவும் என்றே கூறலாம். Sandakphu-வில் உள்ளூர்வாசிகளின் தனித்துவமான இரவுநேர நடன நிகழ்ச்சியை ரசித்த கணேஷ் இந்த ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவு செய்தார். இரவு நேர வீடியோவில் நெருப்பு எரியும் காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ரெனோ 5 ப்ரோ 5ஜி AI ஹைலைட் வீடியோ-அல்ட்ரா நைட் மோட் அம்சத்தைப் பயன்படுத்தி இந்த
தருணம் சரியாகப் பிடிக்கப்பட்டது.

அனைத்து இடங்களிலும் இதன் கேமராவை சரியாக பயன்படுத்தமுடியும்

சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் சிறந்த கேமரா சாதனமாக இருக்கும் ரெனோ 5 ப்ரோ மாடலை தொழில் வல்லுநர்கள் தேர்வு செய்வதற்கான மற்றொரு பெரிய காரணம் ஸமார்ட்போனின் நல்ல வடிவமைப்பு ஆகும். அதாவது சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான சாதனம். வெறும் 173 கிராம் கொண்ட ரெனோ 5 ப்ரோ மாடல் உதவியுடன சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக மெலிதான வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் மிக அருமையாக பயன்படுத்த முடியும். அதேசமயம் ஒப்பிடமுடியாத பணிச்சூழலியல் மற்றும் கேமரா திறன்களை இந்த சாதனம் கொண்டுள்ளதால் பல்வேறு மக்கள் இதை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு பல்வேறு முக்கியமான வசதிகளை வழங்குகின்ற இந்த சாதனம். அதாவது இடத்திற்கு தகுந்தபடி மோட்-ஐ மாற்றியமைக்க இதில் பல வசதிகள் உள்ளன. குறிப்பாக மிகவும் கடிமான இடங்களில் கூட இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். வழக்கமான ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வசதியை விட கூடுதல் அம்சத்துடன் வெளிவந்துள்ளது ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல்.

நினைவுகளைப் பிடிக்க சரியான ஸ்மார்ட்போன்
சிற்ந்த கேமரா முன்னேற்றங்களுடன் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நினைவுகளை அப்படியே பிடிக்க உதவும் சாதனம் தான் இந்த ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல்.

ஒப்போ நிறுவனம் தற்போதைய சந்தை தேவைகளைப் புரிந்துகொள்வதால், பிராண்ட் எப்போதும் அதன் தயாரிப்புகளுடன் நுகர்வோரை ஆச்சரியப்படுத்துகிறது. ரெனோ 5 ப்ரோ 5ஜி ஆனது புதிய படைப்பாளர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 5ஜி வசதி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய சாதனம் சரியான விலை மற்றும் திறமையான கேமரா வன்பொளை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெனோ 5 ப்ரோ 5ஜி ஆனது வீடியோகிராஃபி அனுபவத்துடன் நம்மை பிரமிக்க வைக்கின்றன என்று தான் கூறவேண்டும். அதேபோல் ஒப்போ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போனும் தனித்துவமான வசதியை கொண்டுள்ளன என்று தான் கூறவேண்டும். அதன்படி ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடலும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. எப்போதும் மொபைல் வீடியோ தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் முன்னேற்றத்துடன் OPPO மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reno Pro 5G - The Perfect Phone For Content Creators As Seen Through The "Life Unscene" Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X