செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

Posted By:

நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம். அவற்றில் சிம்கார்டு போட்டால் நமக்கென தனி எண் கிடைக்கும் என நான் சொன்னால், என்னை முட்டாள் என்பீர்கள். பெரும்பாலானோர் பல்வேறு நிறுவனங்களின் சிம்கார்டுகளையும் விதவிதமான எண்களையும் வைத்திருப்பது மிகவும் சாதாரணமே!

ஆனால் இந்த செல்போன் எண்கள் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது? எப்படி கண்டுபிடித்தார்கள்? அதில் சுவாரஸ்யம்தான் என்ன? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடைதான் பின்வருபவை!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டது:

செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

முதன்முதலில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது நாம் போன் செய்தால் அந்த இணைப்பு நேரடியாக தொலைபேசி நிலையத்திலிருப்பவருக்குச் செல்லும். இவர் வேறுவேலைகள் இல்லாவிட்டால், நமது அழைப்பை நாம் விருப்பப்படுபவருடன் இணைப்பார். இதற்காக பல மணிநேரங்கள் காத்திருக்கவேண்டும். அலெக்சாண்டர் கிரகாம்பெல் மற்றும் அவருடைய நண்பரான Dr.மோசெஸ் கிரீலே பார்கர் ஆகியோர் இணைந்துதான் புதிய முறையை உருவாக்கினார்கள். அந்த சூழலில் அந்த ஊரில் கடும் நோயொன்று பரவிய வேளையில், தொலைபேசி நிலையத்திலிருக்கும் நபருக்கும் நோய் தாக்கியதால் அவரால் தனது பணியை தொடரமுடியவில்லை. எனவே மக்கள் தொலைபேசி இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில்தான் இவர்கள் இருவரும் தற்பொழுது நாம் பயன்படுத்தும் எண்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தும் முறையை உருவாக்கினார்கள்.

முதல் ஏரியா கோட்:

செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

முதன்முதலில் ஏரியா கோட் என்ற எண் எப்பொழுதுதெரியுமா உருவாக்கப்பட்டது? 1951ஆம் ஆண்டில். அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதிக்குத்தான் 201 என்ற எண் வைக்கப்பட்டது.

விலைமதிப்பான எண்:

செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

அதிக விலைமதிப்பான எண் என்ற பெருமையைப் பெறுவது 666-6666 என்ற தொலைபேசி எண்தான் உலகிலேயே விலைமதிப்பான எண். இதை கத்தாரில் உள்ள ஒரு அமைப்பு $201 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது.

888-8888 எண்ணுக்கும் அப்பிளுக்குமான உறவு என்ன?

செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

888-8888 என்ற எண்தான் உலகிலேயே இரண்டாவது மதிப்புமிக்க எண்ணாக கருதப்படுகிறது. இதை தனதாக்கி வைத்திருந்தவர் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவுனர் ஸ்டீவ் வோஸ்னியாக். இந்த எண்ணுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தவறான அழைப்புகள் வருவதாகக்கூறி பின்னாளில் இதை விற்றுவிட்டார்.,

முதல் அவசர தொலைபேசி எண்

செல்போன் எண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை...

முதல் அவசர தொலைபேசி எண் தொடங்கியது லண்டன் தான். நாள் ஜூலை, 1937. ஒவ்வொரு நாட்டிலும் அவசர எண்கள் தனித்தனியாக இருக்கும். இந்த எண்களை அழுத்தி மொபைல் போனில் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் அவசர உதவியை பெறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot