கடந்த வாரம் டிரெண்டிங்கான ஸ்மார்ட்போன்கள்: புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் இதை வாங்கலாம்!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப்பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது பிரதானமாகிவிட்டது. 2022-ல் வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொகுப்பைக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். சமீபத்திய புதுப்பிப்புகள், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் என குறிப்பிடத்தக்க பல்வேறு ஆதரவுகளுடனான சாதனங்கள் அறிமுகமாகி இருக்கிறது. இதில் டிரெண்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். சியோமி, ரெட்மி, சாம்சங், ஆப்பிள் என பல சாதனங்கள் கடந்த வாரத்தில் மிகவும் டிரெண்டாக இருந்திருக்கிறது.

கடந்த வாரத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள்

கடந்த வாரத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள்

கடந்த வாரத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் சியோமி மற்றும் அதன் துணை பிராண்டான ரெட்மி சாதனங்களும் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக ரெட்மி நோட் 11 தொடர் ஸ்மார்ட்போனானது நம்ப முடியாத அளவிற்கு அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி போன்ற சாம்சங் ஸ்மார்ட்போன்களும் கடந்த வாரத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி, கேலக்ஸி ஏ73 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ13 ஆகியவை ஏ தொடரின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களாகும். கடந்த வாரத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஐபோன்களும் அடங்கும். ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது அதன் தனித்துவமான மற்றும் உயர்நிலை அம்சங்களுடன் மிகவும் பிரபலமான சாதனங்களின் பட்டியலை பிடித்திருக்கிறது. ஹானர் 70 ப்ரோ+ மற்றும் டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஆகிய சாதனங்களும் பட்டியலில் அடங்கும்.

சியோமி ரெட்மி நோட் 11டி ப்ரோ+

சியோமி ரெட்மி நோட் 11டி ப்ரோ+

 • 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
 • மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட்
 • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
 • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு
 • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயூஐ 13
 • டூயல் சிம்
 • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமராக்கள்
 • 16 எம்பி செல்பி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு
 • 5080 எம்ஏஎச் பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

  சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

  • 6.8 இன்ச் குவாட் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓ-எட்ஜ் அமோலெட் டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜபி உள்சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1
  • 108 எம்பி, 12 எம்பி, 10 எம்பி, 10 எம்பி பின்புற கேமரா
  • 40 எம்பி முன்புற செல்பி கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
  • சியோமி ரெட்மி நோட் 11

   சியோமி ரெட்மி நோட் 11

   • 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
   • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவு
   • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
   • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13
   • டூயல் சிம்
   • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
   • 13 எம்பி முன்புற கேமரா
   • டூயல் 4ஜி வோல்ட்இ
   • 5000 எம்ஏஎச் பேட்டரி
   • சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி

    சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி

    • 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே
    • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
    • ஆண்ட்ராய்ட் 12 சாம்சங் ஒன் யூஐ 4.1
    • 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி பின்புற கேமரா
    • 32 எம்பி செல்பி கேமரா
    • 5000 எம்ஏஎச் பேட்டரி
    • ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

     ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

     • 6.7 இன்ச் ஓஎல்இடி சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
     • 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி வேரியண்ட்கள்
     • ஐஓஎஸ் 15
     • நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆதரவு
     • 12 எம்பி + 12 எம்பி + 12 எம்பி பின்புற கேமரா
     • 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா
     • டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ

      டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ

      • 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே
      • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
      • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
      • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்)
      • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
      • 32 எம்பி செல்பி கேமரா
      • டூயல் 4ஜி வோல்ட்இ
      • 5000 எம்ஏஎச் பேட்டரி
      • ஹானர் 70 ப்ரோ+

       ஹானர் 70 ப்ரோ+

       • 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி வளைந்த டிஸ்ப்ளே
       • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு
       • ஆண்ட்ராய்டு 12
       • டூயல் சிம் (நானோ + நானோ)
       • 54 எம்பி + 50 எம்பி + 8 எம்பி பின்புற கேமரா
       • 50 எம்பி முன்புற கேமரா
       • 4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top Most Trending Smartphones on Last Week: Redmi, Samsung Galaxy, Iphones in List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X