உலகின் 'டாப் 5' ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.!!

By Meganathan
|

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தை அடிக்கடி பல்வேறு மாறுதல்களை சந்தித்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் வரை நோக்கியா, எல்ஜி, மற்றும் சோனி போன்ற நிறுவனகங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்மார்ட்போன் சந்தையில் இன்று சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்னும் வரும் ஆண்டுகளில் இந்த நிலை மாறலாம்.

தற்சமயம் வரை சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்தாலும் பல்வேறு இதர நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதே உண்மை. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் டாப் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1

1

சீனாவில் சிறிய பிராண்டுகளுடனான போட்டியில் 75% விற்பனை சரிவை சந்தித்த லெனோவோ உலகின் டாப் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இடம் பிடிக்க தவறியிருக்கின்றது.

2

2

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் கருவிகளுக்கு ஆசிய-பசிபிக் பகுதிகளில் அதிக வரவேற்பு இருந்தது. இந்நிறுவனம் மொத்தமாக 15,048,000 கருவிகளை விற்பனை செய்து உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 4.3% பங்குகளை கொண்டு பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது.

3

3

சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒப்போ நிறுவனம் 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 145% வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கின்றது.

4

4

மற்றொரு சீன நிறுவனமான ஹூவாய் சீனாவில் வேகமாக வளர்ந்து வருவதோடு இந்நிறுவன கருவிகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிகா போன்ற நாடுகளிலும் வரவேற்பு கிடைத்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் சுமார் 28,861,000 கருவிகளை விற்பனை செய்து 8.3% பங்குகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹூவாய் நிறுவனம் இருக்கின்றது.

5

5

உலக ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகளின் விற்பனை 14% வரை குறைந்திருக்கின்றது.

6

6

தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. மொத்தமாக சுமார் 81,186,900 கருவிகளை விற்பனை செய்திருக்கும் சாம்சங் நிறுவனம் 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.2% பங்குகளை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

7

7

இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த பட்டியல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை செய்திருக்கும் மொத்த கருவிகளை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இதோடு 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான நிலவரம் மட்டுமே அடங்கும் என்பதால் வரும் காலங்களில் விற்பனைக்கு ஏற்ப இந்நிறுவனங்களின் நிலை மற்றும் டாப் 5 இடங்கள் மாறும்.

8

8

இங்கு தொகுக்கப்பட்ட தகவல்கள் கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top massive smartphone makers of the world. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X