ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்; அப்ளிகேஷன்கள் சிறப்பு பார்வை

By Super
|
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்; அப்ளிகேஷன்கள் சிறப்பு பார்வை
ஸ்மார்ட்போன்களில் அப்லோடு செய்யப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தலைசிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாக தேடுபொறியில் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓஎஸ் உலகையே கலக்கி வருகிறது. தற்போது சாம்சங், எச்டிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாகவே வருகிறது.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸடம் மூலம் ஏராளமான வசதிகளை நாம் மொபைல்போனில் பெற முடியும். மொத்தம் 4,25,000 அப்ளிகேஷன்களை கொண்ட மிகப்பெரும் மார்க்கெட்டை ஆன்ட்ராய்டு கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உருவாக்கப்படுகின்றன.தவிர, நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உலகம் முழுவதும் டவுண்லோடு செய்யப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்ள்.

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் கொண்ட போனை வைத்திருந்த ஒருவரை வேறு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனுக்கு மாற சொன்னால், நிச்சயம் முகத்தை திருப்பிகொள்வார். அந்த அளவுக்கு இயக்குவதற்கு எளிமையாகவும், ஏராளமான வசதிகளையும் கொண்டிருக்கிறது. பேட்டரி சார்ஜை சேமிக்கும் திறனில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விஞ்ச ஆளில்லை.

மேலும், ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை சல்லி காசு கூட கொடுக்காமல் இலவசமாகவே பெற முடியும் என்பதுதான் இதன் ஹைலைட். சரி, விஷயத்திற்கு வருவோம். ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்களை பெற முடியும் என்றாலும், பொதுவாக அனைவருக்கும் அத்தியாவசியமாகவும், அன்றாடம் பயன்படும் ஒரு சில அப்ளிகேஷன்கள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ்:

இன்றைய கால சூழலில் அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. அப்படி செல்பவர்களுக்கு அந்த ஊரின் விபரங்களையும், வரைபடைத்தையும் தெரிந்துகொண்டால் பயமில்லாமல் அங்கு செல்லலாம். இந்த வசதி உங்கள் மொபைல்போனிலியே இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் அல்லவா. ஆம், ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் நீங்கள் கூகுள் மேப்பை உங்கள் போனிலேயே அப்லோடு செய்து கொள்ள முடியும்.

அட்வான்ஸ்டு டாஸ்க் கில்லர்:

இது பேட்டரி சேமிப்பு திறனுக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். டிஸ்பிளேயில் இருக்கும் தேவையில்லாத அப்ளிகேஷன்கள் அனைத்தையும் ஒரே சொடுக்கில் அழித்துவிடும் (டெலிட்) அப்ளிகேஷன்தான் அட்வான்ஸ்டு டாஸ்க் கில்லர். நீங்கள் ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக திறந்து அழிப்பதற்குள் பேட்டரி சார்ஜ் வீணாக செலவாவதை இது தடுத்துவிடும்

யூ டியூப்:

வெப் பிரவுசர் துணையில்லாமல் வீடியோ பைல்களை நேரடியாக யூ ட்யூப் மூலம் பார்க்கும் வசதியை ஆன்ட்ராய்டு ஓஎஸ் மூலம் பெற முடியும். ஆன்ட்ராய்டு ஓஎஸ் யூ ட்யூபை சப்போர்ட் செய்கிறது.

நெட்குயின் ஆன்ட்டி வைரஸ்:

வைரஸ், மால்வேர் மற்றும் ஸ்பைவேர் உள்ளிட்ட வைரஸ் பைல்களை பற்றிய அச்சத்தை போக்கி நிம்மதியாக இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்ய உதவும் நெட்குயின் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை ஆன்ட்ராய்டு போன்களில் அப்டேட் செய்துகொள்ளலாம்.

ஆடோப் ரீடர்:

பிடிஎப் டாக்குமென்ட்களை தெள்ள தெளிவாக படிப்பதற்கு உதவும் ஆடோப் ரீடரை ஆன்ட்ராய்டு போன்களில் அப்லோடு செய்துகொள்ள இயலும்.

ஜிடாக்:

கூகுள் நிறுவனத்தின் ஜிடாக் வசதியை ஆன்ட்ராய்டு போன்களில் பெற முடியும். மொபைல்போன் மூலமாகவே உலகின் எந்த மூலையில் உள்ளவருடன் மிகவும் எளிதாக சாட்டிங் செய்ய முடியும். ஜிடாக்கில் சாட்டிங் செய்ய இணையதள முகவரியில் சென்று லாக்-இன் மற்றும் சைன்-இன் செய்ய தேவையில்லை. இந்த ஜிடாக் அப்ளிகேஷனை ஆன்ட்ராய்டு போன்களில் பெற முடியும்.

விரைவில் வீடியோ சாட்டிங் வசதியுடன் ஜிடாக் அப்ளிகேஷனை சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000போனில் அப்டேட் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிமெயில்:

ஜிமெயில் அப்ளிகேஷனையும் ஆன்ட்ராய்டு போன்களில் அப்லோடு செய்துகொள்ளலாம். அப்புறம் என்ன பாதி அலுவலக வேலைகளை மொபைல்போனிலேயே முடித்துவிட முடியும் அல்லவா.

சீஸ்மிக் அப்ளிகேஷன்:

சமூக வலைதளங்களை மொபைல்போனில் உள்ள வெப் பிரவுசர்கள் மூலம் இயக்குவது கடினம். மொபைல்போன்களின் சிறிய அளவிலான திரைகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த குறையை போக்கும் அப்ளிகேஷன்தான் சீஸ்மிக். ஆன்ட்ராய்டு போன்களில் சீஸ்மிக்கை அப்லோடு செய்துகொண்டால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாகவும், எளிதாகவும் சமூக வலைதளங்களுக்குள் செல்ல முடியும். உங்கள் நண்பர்கள் அனுப்பும் செய்திகளை பாப்-அப் மெஸெஜ் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் வசதியையும் சீஸ்மிக் கொடுக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X