பட்ஜெட் விலை: சிறந்த இன்பினிட்டி "நாட்ச் டிஸ்பிளே" ஸ்மார்ட்போன் பட்டியல் 2018.!
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஆண்டு உண்மையில் சிறந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஆண்டு உண்மையில் சிறந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் பல புதிய மாற்றங்களை அறிமுகப் படுத்தியது. இதில் முக்கியமாக அண்மையில் வெளியாகிய ஐபோன் எக்ஸ் மாடல் இல் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே அனைவரையும் கவர்ந்தது.
ஐபோன் இன் இந்த முதல் இன்பினிட்டி எண்டு- டு -எண்டு தொடுதிரைகள் ஸ்மார்ட்போன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தி அனைவரையும் கவர்ந்தது. நம்மில் பலருக்கும் இந்த நாட்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றி இருக்கும். ஆனால் அந்த டிஸ்பிளே உடன் வெளியாகிய ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் விலை அதிகமாய் இருந்தது நம்மைச் சற்று சிந்திக்க வைத்தது.

நாட்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்
இனி தயக்கம் வேண்டாம், உங்களுக்காகச் சந்தையில் நாட்ச் டிஸ்பிளே உடன் வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
உங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த நாட்ச் டிஸ்பிளேயுடன் வரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.

1. நோக்கியா 6.1 பிளஸ்
- 5.8 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய பாதுகாப்பான 2.5டி கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 636 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 16 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 3060 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.15,999

2. சியோமி ரெட்மி 6 ப்ரோ
சியோமி நிறுவனம் அண்மையில் தனது புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ நாட்ச் டிஸ்பிளே மாடல் ஸ்மார்ட்போன் ஐ இந்திய சந்தியில் அறிமுகம் செய்தது.
- 5.8 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட்
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு என இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.
- MIUI 9.6 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 5 மெகா பிக்சல் பிரண்ட் ஷூட்டர் செல்பி கேமரா
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.10,999

3. ரியல்மி 2
- 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 450 சிப்செட்
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு என இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.
- கலர் ஓ.எஸ் 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 8 மெகா பிக்சல் பிரண்ட் ஷூட்டர் செல்பி கேமரா
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.8,990

4. ஹவாய் பி20 லைட்
- 6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 2.5டி கர்வுட் கிளாஸ் வடிவமைப்பு
- ஹேசிலிகோன் கிரீன் 659 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு வசதி
- EMUI 8.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 24 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: 20,999


Click it and Unblock the Notifications