ஐபோன் எஸ்இ அறிமுகம், கருவியின் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள்.!!

Written By:

அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ (SE) மற்றும் ஐபேட் ப்ரோ கருவிகளை நேற்று இரவு அறிமுகம் செய்தது. இந்திய சந்தைக்கு ஏற்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கருவிகள் ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகின்றது.

இங்கு புதிய ஐபோன் எஸ்இ கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
திரை

திரை

ஐபோன் எஸ்இ கருவியில் 4 இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளது. 640*1136 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 3டி டச் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

ஐஓஎஸ் 9 இயங்குதளம் கொண்ட ஐபோன் எஸ்இ கருவியின் இண்டர்ஃபேஸ் கவர்ச்சிகரமாக இருப்பதோடு பயன்பாடுகள் எளிமையாக இருக்கின்றன. இதில் மெசேஜ், ஃபேஸ்டைம், புகைப்படம், மியூசிக் மற்றும் மேப்ஸ் போன்ற செயலிகள் பில்ட் இன் ஆப்ஷன்களாக வழங்கப்பட்டுள்ளன.

மெமரி

மெமரி

ஐபோன் எஸ்இ கருவியானது 16 மற்றும் 64 ஜிபி மெமரிகளில் கிடைக்கின்றது. மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

நிறம்

நிறம்

ஐபோன் எஸ்இ கருவியானது ஸ்பேஸ் கிரே, சில்வர், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு மெட்டாலிக் பினிஷிங்கில் கிடைக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

64-பிட் ஏ9 சிப் மற்றும் எம்9 மோஷன் கோ-பிராசஸர் கொண்ட ஐபோன் எஸ்இ கருவியின் பேட்டரி குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

விலை

விலை

இந்தியாவில் ஐபோன் எஸ்இ 16 ஜிபி மாடல் ரூ.25,950க்கும், 64 ஜிபி மாடல் ரூ.32,435க்கும் கிடைக்கும் என்றும், இதன் விற்பனை ஏப்ரல் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

கேமரா

ஐபோன் எஸ்இ கருவியில் 12எம்பி ஐசைட் கேமரா, மற்றும் அதிவேக ஃபோகஸ் செய்ய ஏதுவாக ஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றது. இதோடு இமேஜ் சிக்னல் பிராசஸர், மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் ரெடக்ஷன், லோக்கல் டோன் மேப்பிங் மற்றும் சிறப்பான ஃபேஸ் டிடெக்ஷன் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Top Features Of Cheapest iPhone Ever Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot