குழப்பமே வேணாம்.. யோசிக்காமல் இந்த டாப் 5 ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்கலாம்!

|

என்னதான் பட்ஜெட் விலை மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும், ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நிம்மதியை அது கொடுக்காது. நீண்ட நாட்களாக ஒரு ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் எது பெஸ்ட் என்ற குழப்பம் வேணாம். நியாயமான விலையில் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் லிஸ்ட்

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் லிஸ்ட்

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்றால் அதன் விலை மட்டுமே சிந்தனைக்கு வருகிறது. ஆனால் அதன் அம்சங்கள் குறித்து நாம் யோசிப்பது இல்லை. அதன் அனுபவமும் அதை கையில் வைத்துக் கொண்டு வெளியில் நடமாடும் கெத்தும் தனிதான்.

நியாயமான அதாவது சரியான விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதில் ஐபோன் 13 முதல் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா வரை அனைத்து ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கிறது.

ஐபோன் 13

ஐபோன் 13

பண்டிகை காலத்தில் இந்தியாவில் சிறந்த சலுகையுடன் வாங்கக் கிடைக்கும் போன்களில் ஐபோன் 13 சிறந்த தேர்வாகும். இந்த ஐபோனுக்கான சலுகைகள் ஒவ்வொரு தளத்திலும் மாறுபடுகிறது. முன்பை விட ஐபோன் 13 மாடல் தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோன் 13 ஆனது தற்போது ரூ.59,999 என கிடைக்கிறது. கார்ட் சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை ரூ.58,000 என வாங்கலாம்.

டூயல் ரியர் கேமரா

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா.

கூகுள் பிக்சல் 7

கூகுள் பிக்சல் 7

நியாயமான விலையில் ப்ரீமியம் தர அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 7 போன் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு என்பது மிக அவசியம். பாதுகாப்பு என்பதற்கு மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் 7 ஆகும். Google Pixel 7 ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சமும் மேம்பட்டதாக இருக்கிறது.

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் விலை

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டென்சர் ஜி2 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

இந்த கூகுள் பிக்சல் போனில் 4335 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அன்ப்ளர் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 என கிடைக்கிறது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி ஸ்மார்ட்போனானது சமீபத்தில் பெரிய அளவு விலைக் குறைப்பைப் பெற்றது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.52,999 என கிடைக்கிறது. கார்ட் சலுகைகள் உடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.50,000 என வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி S22 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு சிறந்த தேர்வான ப்ரீமியம் ஸ்மாரட்போன் ஆகும்.

25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி S22 5G ஆனது 6.1 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. தரமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இதில் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனானது Exynos 2200 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 3700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

மோட்டோ நிறுவனத்தின் சமீபத்திய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனும் ஐபோன், கூகுள் போனின் விலைப் பிரிவுக்கு இணையாக அறிமுகமாகி இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 ஆகும்.

125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஐபோன் விலைக்கு மோட்டோ போனா என்று ஆச்சரியப்பட வேண்டாம். இதன் அம்சங்களும் வடிவமைப்பும் வேற லெவலில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது வளைந்த காட்சி டிஸ்ப்ளே உடன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 200 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் அதிக மெகாபிக்சல் கேமரா மொபைல் என்பது இதுதான்.

அதேபோல் இதில் 60 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனில் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ

Xiaomi 12 Pro என்பது சிறந்த பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மலிவு விலைப் பிரிவில் புகழ் பெற்ற நிறுவனம் தான் சியோமி. ஆனால் சியோமி ப்ரீமியம் ரகத்திலும் சிறந்து விளங்குகிறது. அதை நிரூபிக்கும் ஸ்மார்ட்போன் தான் Xiaomi 12 Pro. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 ஆகும்.

2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.73 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. 8K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் கூடிய 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 4600 எம்ஏஎச் ஆதரவுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Top Feature Flagship Smartphones: iPhone, Google Pixel, Samsung, Xiaomi in List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X