Just In
- 16 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 20 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 20 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 22 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த செப்டம்பரில் 5 சம்பவங்கள்! பணத்தை செலவு பண்ணாம இருக்குறது ரொம்ப கஷ்டம்!
கடந்த ஆகஸ்ட் மாதத்தை போல.. இந்த செப்டம்பர் மாதத்திலும் கூட பல்லை கடித்துக்கொண்டு பணத்தை சேர்த்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் - ரொம்ப கஷ்டம்!
ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பலரையும் 'டெம்ப்ட்' ஏற்றும் படியான ஸ்மார்ட்போன்கள் எதுவும் அறிமுகமாகவில்லை . ஆனால் இந்த செப்டம்பர் அப்படி இருக்கப்போவதில்லை.. வரப்போகும் ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) வேற லெவல்ல இருக்க போகுது!

ஆப்பிள் தொடங்கி ஒன்பிளஸ், சியோமி வரை.. ஒரே அடைமழை தான்!
உங்களில் பலருக்கும் தெரியும் - இந்த மாதம் (செப்டம்பர் 2022) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் ஆகிறதென்று!
அதுமட்டுமின்றி மோட்டோரோலா, ஐக்யூ, ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களும் கூட (இந்தியா உட்பட) உலகளவில் அறிமுகம் ஆகவுள்ளன!
அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

01. iPhone 14 Pro Max என்ன விலைக்கு வரும்?
செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் ஆல்-நியூ 2022 ஐபோன் சீரீஸின் ஹை-எண்ட் மாடல் ஆன ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் இந்திய விலை நிர்ணயம் ஆனது தோராயமாக ரூ.1.4 லட்சம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே
- 48MP கேமரா சிஸ்டம்
- ஏ16 பயோனிக் சிப்
- செல்பீ கேமராவிற்கான புதிய டேப்லெட் வடிவிலான கட்அவுட்
- செலவை குறைக்கும் நோக்கத்தின் கீழ் புதிய சிபியு பயன்படுத்தப்படலாம்
- ஐஓஎஸ் 16
- புதிய வேப்பர் சேம்பர் கூலிங் மெக்கானிஸம்

02. Motorola Edge 30 Ultra என்ன விலைக்கு வரும்?
மோட்டோரோலா தனது லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ராவை வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதியன்று உலகளாவிய சந்தைகளில் வெளியிட உள்ளது. இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.69,999 ஆகும்!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 6.67-இன்ச் ஃபுல்-எச்டி+ 144Hz OLED டிஸ்பிளே
- 125W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4,500mAh பேட்டரி
- ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்
- 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 12ஜிபி வரை ரேம்
- 200MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 60MP செல்பீ கேமரா

அதே நாளில் Motorola Edge 30 Fusion அறிமுகமும் நடக்கலாம்!
செப்டம்பர் 8 ஆம் தேதி, எட்ஜ் 30 அல்ட்ராவுடன் சேர்த்து மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் 30 ஃப்யூஷனையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் 30 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் சுமார் ரூ.24,990 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 6.55-இன்ச் ஃபுல்-எச்டி+ 144Hz OLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 888+ ப்ராசஸர்
- 4,400mAh பேட்டரி
- 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ்
- 50MP + 13MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 32MP செல்பீ கேமரா

03. iQOO Z6 Lite
இந்த செப்டம்பர் மாதத்தில், ஐக்யூ Z6 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐக்யூ Z6 லைட் அறிமுகம் செய்யப்படலாம். இதன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் ரூ.12,990 ஆகும்!

ஐக்யூ 6 லைட்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 6.58-இன்ச் ஃபுல்-எச்டி+ LCD டிஸ்பிளே -
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50MP டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8MP செல்பீ கேமரா
- 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி

04. Oneplus 10 Ultra
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10 சீரீஸின் கீழ் 'அல்ட்ரா' மாடலை அறிமுகம் செய்யும் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது. இது அநேகமாக OnePlus 10 Pro-வின் "மேம்படுத்தப்பட்ட" மாடலாக இருக்கும். இது ரூ.79,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ஒன்பிளஸ் 10 அல்ட்ரா: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- ஒன்பிளஸ் 10 ப்ரோவின் அதே வடிவமைப்பை எதிர்பார்க்கலாம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC சிப்செட்டை பேக் செய்யலாம்
- பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட மேம்படுத்தப்பட்ட ரியர் கேமரா செட்டப்பை எதிர்பார்க்கலாம்
- பெரும்பாலும் ஹாசல்பிளாட் பிராண்டிங்கையே பெறும்

05. Xiaomi 12T Pro
இந்த மாதம், உலகளாவிய பிராந்தியங்களில் சியோமி நிறுவனத்தின் 12T Pro மாடல் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோ மாடலின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் ரூ.39,999 ஆகும்!

சியோமி 12டி ப்ரோ" என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- 200MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 20MP செல்பீ கேமரா
- 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470