இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!

|

எந்த பக்கம் திரும்பினாலும் விளம்பர பலகைகளில் தெரியும்... அடிக்கடி டிவி மற்றும் யூட்யூப்பில் காட்சிப்படுதத்தப்படும்.. இப்படியாக மிகவும் விளம்பரப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் தான் - பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (Best Smartphones) என்று நீங்கள் நினைத்தால்.. அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்!

அப்போது எது தான் பெஸ்ட் போன்?

அப்போது எது தான் பெஸ்ட் போன்?

எது பெஸ்ட் ஸ்மார்ட்போன் என்றால்? - எது கொடுக்குற காசுக்கு வொர்த் ஆன அம்சங்களை வழங்குகிறதோ... அதுதான் சிறந்த ஸ்மார்ட்போன்!

அப்படியாக மிகவும் மலிவான விலையில் அதே சமயம் விலையை மீறிய அம்சங்களை வழங்கும் 8 பெஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை பற்றித்தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்!

முதலில் Flipkart வழியாக வாங்க கிடைக்கும் 4 மலிவான ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்!

வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

01. ஐடெல் ஏ48 (Itel A48)

01. ஐடெல் ஏ48 (Itel A48)

இந்த ஸ்மார்ட்போனின் 2GB+32GB ஆப்ஷன் ஆனது Flipkart-ல் ரூ.5,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.1 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

02. ஜியோனி மேக்ஸ் (GIONEE Max)

02. ஜியோனி மேக்ஸ் (GIONEE Max)

இந்த ஸ்மார்ட்போனின் 2GB+32GB ஆப்ஷன் ஆனது Flipkart-ல் ரூ.6,599 க்கு விற்கப்படுகிறது. இது 6.1 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

03. ஜியோனி மேக்ஸ் ப்ரோ (GIONEE Max Pro)

03. ஜியோனி மேக்ஸ் ப்ரோ (GIONEE Max Pro)

இந்த ஸ்மார்ட்போனின் 3GB+32GB ஆப்ஷன் ஆனது Flipkart இல் ரூ.6,999 க்கு விற்கப்படுகிறது. இது 6.52 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது.

04. மைக்ரோமேக்ஸ் ஐஎன் 2பி (Micromax IN 2B)

04. மைக்ரோமேக்ஸ் ஐஎன் 2பி (Micromax IN 2B)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB ஆப்ஷன் ஆனது Flipkart இல் ரூ.8,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இப்போது Amazon வழியாக வாங்க கிடைக்கும் 4 மலிவான ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்!

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

05. ரெட்மி 9ஏ ஸ்போர்ட் (Redmi 9A Sport)

05. ரெட்மி 9ஏ ஸ்போர்ட் (Redmi 9A Sport)

இந்த ஸ்மார்ட்போனின் 2GB+32GB ஆப்ஷன் ஆனது ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை வழங்குகிறது.

06.ரெட்மி 9 ஆக்டிவ் (Redmi 9 Active)

06.ரெட்மி 9 ஆக்டிவ் (Redmi 9 Active)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB ஆப்ஷன் ஆனது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஆக்டா கோர் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர், 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 13MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

07. ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i)

07. ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB ஆப்ஷன் ஆனது அமேசானில் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 8 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5000mAh பேட்டரி போன்றவைகளை வழங்குகிறது.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

08. ஒப்போ ஏ15 (OPPO A15)

08. ஒப்போ ஏ15 (OPPO A15)

இந்த ஸ்மார்ட்போனின் 4GB+64GB ஆனது ரூ.9,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 4230mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

Photo Courtesy: Amazon, Flipkart

Best Mobiles in India

English summary
Top Best Low Price Budget Smartphones 2022 Available in Flipkart Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X