சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலின் 7 சிறப்பு அம்சங்கள்
கிழக்கு நாடுகள் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியாமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பெறும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் MIUI 8 என்ற மாடலில் ஆண்ட்ராய்டு போன் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 மாடல் என்பதால் அனைவராலும் குறிப்பாக இளைஞர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்காமலேயே லாஸ்ட் சீன் செக் செய்வதெப்படி.?
சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் இந்த மாடல் குறித்து இதுவரை வெளியான வதந்திகளின் மூலம் இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

ரெட்மி நோட் 3 முதல் ரெட்மி மி 4i வரை MIUI 9 சப்போர்ட் செய்யுமா?
இதுவரை வெளியான ரெட்மி நோட் 3, ரெட்மி 2 ப்ரைம், ரெட்மி 3, ரெட்மி 3S, மி 4s, மி 4c, மி 4i, மி 5, மி மேக்ஸ், மி நோட் மற்றும் மி பேட் 2 ஆகிய மாட்லகளும் மி 5s, மி 5s ப்ளஸ் ஆகிய மாடல்களிலும் உள்ள அம்சங்கள் இந்த MIUI 9 மாடலிலும் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்டி விண்டோ ஆப்சன் சப்போர்ட் செய்யும்:
சாம்சங் மாடல்களில் இருப்பது போல் இந்த சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலிலும் மல்டி விண்டோ சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இத மூலம் ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை நீங்கள் சைட் பை சைட் ஆக உபயோகப்படுத்தலாம்.

நோட்டிபிகேஷனுக்கு விரைவான பதில்
ஆப்பிள் ஐபோனில் நோட்டிபிகேஷனுக்கு குவிக் ரிப்ளை ஆப்சன் இருப்பதுபோல் இந்த மாடலிலும் அதே அம்சம் இருக்கின்றது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. வாட்ஸ் அப், ஹைக் மற்றும் டெலிகிராம் ஆகிய ஆப்ஸ்களும் இதில் நல்ல சப்போர்ட் செய்யும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அடடே இந்த வசதியும் உண்டா?
பேக்ரவுண்டில் நாம் உபயோகப்படுத்திய ஆப்ஸ்களால் நமது ஸ்மார்ட்போனில் பேட்டரி வீணாவது தடுப்பது குறித்த ஆப்சன் கூகுள் டோஸ் (Doze) மாடலில் இருந்தது. எனவே இந்த சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலிலும் அதே டோஸ் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஸ்மார்ட்போனின் சார்ஜ் பெரும்பகுதி பாதுகாக்கப்படும்

புரோஜெக்ட் Svelte:
பல முன்னணி மாடல் ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சமான புரோஜெக்ட் Svelte அம்சம் இந்த மாடலிலும் இருக்கும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் ரேமில் உள்ள மெமரி அதிகளவு செலவாகாதவாறு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அதிகளவு ஆப்ஸ்களை நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பெறலாம்.

டேட்டா சேமிப்பு வசதி உண்டு:
சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலில் டேட்டா அதிகளவு செலவாகாதவாறு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆப்ஸ்களை உபயோகிக்காத நேரத்தில் அந்த ஆப் பேக்ரவுண்டில் இருந்தால் டேட்டா கரைந்து கொண்டே இருக்கும். இந்த சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலில் உள்ள அம்சங்கள் டேட்டா அதிகளவு செலவாகுவதை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

பாதுகாப்புக்கு நம்பர் ஒன் இதுதான்:
ஒவ்வொரு ஸ்மார்ட்போனையும் பாதுகாக்க ஒவ்வொரு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதை போலவே இந்த சியாமி MIUI 9 ஸ்மார்ட்போன் மாடலிலும் பாதுகாப்பு அம்சங்களுக்காக ON VPN அம்சம் உள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

தேவையில்லாத கால்களை பிளாக் செய்யலாம்:
தேவையில்லாத விளம்பரக் கால்கள் நம்மை தொல்லை படுத்தினால் அதை கட்டுப்படுத்த இதில் வசதி உள்ளது. கால் பிளாக்கிங் வசதியை ஆன் செய்து உங்களுக்கு வரௌம் தேவையில்லாத கால்களை தடுத்து நிறுத்தலாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications