Home
Mobile

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனின் 7 முக்கிய தகவல்கள்

By Siva

ஸ்மார்ட்போன் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகி வருகிறது. குறிப்பாக சியாமி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க மற்ற நிறுவனங்கள் தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனின் 7 முக்கிய தகவல்கள்

அந்த வகையில் இந்தியாவில் புகழ் பெற்று வரும் இன்னொரு நிறுவனம் ஒன் ப்ள்ஸ். இந்நிறுவனத்தின் பல மாடல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது.

ஏர்டெல்'ஐ விடக் குறைவான வேகம் வழங்கும் ஜியோ : ஆய்வில் தகவல்!

இந்நிலையில் இந்த ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் மாடல் குறித்து வெளியான ஒருசில தகவல்களை தற்போது பார்ப்போம்.

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் எப்போது வெளிவரும்?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் எப்போது வெளிவரும்?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் மாடல் சீன அரசின் சான்றிதழை பெற்றுவிட்ட நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸில் வெளிவராவிட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் வர வாய்ப்பு உள்ளது.

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் என்ன விலை இருக்கும்?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் என்ன விலை இருக்கும்?

ஒரு புதிய ஸ்மார்ட்போனில் பலவிதமான வசதிகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் முதலில் பார்ப்பது அது என்ன விலை என்பதைத்தான். அந்த வகையில் இந்த ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் ரூ.28,000 வரை இருந்த நிலையில் அதனை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து. இருப்பினும் சரியான விலை குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் எப்படி இருக்கும?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் எப்படி இருக்கும?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒன்ப்ளஸ் 3 மாடலில் இதே சிப்செட் இருந்த நிலையில் தற்போது இந்த மாடலிலும் அதே சிப்செட் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களின் திருப்தி கிடைக்கும் என்'று கூறப்படுகிறது.

ரேம் மற்றும் பேட்டரி குறித்து பார்ப்போமா?

ரேம் மற்றும் பேட்டரி குறித்து பார்ப்போமா?

சிப்செட்டை அடுத்து இந்த ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் மாடலில் மற்ற ஹார்ட்வேர் அம்சங்கள் ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போனை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 64 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3000mAh பேட்டரி ஆகியவை இந்த மாடலிலும் அமைந்திருக்கும்.

வேறு என்ன சிறப்பு அம்சங்கள் என்று பார்க்கலாம்

வேறு என்ன சிறப்பு அம்சங்கள் என்று பார்க்கலாம்

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 Nougat மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் அம்சமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி, டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

அதெல்லாம் சரி, டிஸ்ப்ளே எப்படி இருக்கும்?

ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 5.5 இன்ஸ் அளவில் முழு அளவில் HD பேனல் ஆக இருக்கும். மேலும் 401ppi ரெசலுசனுடன் ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன

ஹைடெக் கேமிரா இருக்குதாமே

ஹைடெக் கேமிரா இருக்குதாமே

ஒரு ஸ்மார்ட்போனின் உயிர்நாடியான கேமிரா இந்த ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் மாடலில் 16 எம்பி பின் கேமிரா சோனி சென்சாருடன் உள்ளது. மேலும் இதில் 4K வீடியோ பதிவு செய்யும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி 8 எம்பி செல்வி கேமிராவும் அதில் 1080p வீடியோ ரிகார்டிங் வசதியும் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's everything you need to know about the mystery OnePlus smartphone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X