புதிய வசதிகளில் அசத்த வரும் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
புதிய வசதிகளில் அசத்த வரும் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி-4 ஸ்மார்ட்போனுக்கு வரவேற்பு கொடுக்க வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் போலும். அடு்த்தடுத்து கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்-4?

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் மீது இருக்கும் மோகம் முடியவில்லை என்றாலும், அதற்கும் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் பற்றிய மோகமும் ஆரம்பமாகிவிடும் போலிறிக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்றாலும், இதன் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய தகவல்கள் சில வெளியாகி வருகிறது.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரம் கசிவு ?

இப்படி கேலக்ஸி எஸ்-4 ஸமார்ட்போன் பற்றி தகவல்கள் கசிந்து வருவது அல்லாமல், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சில வலைத்தளங்களில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் ஓலெட் எச்டி திரை வசதி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், 1920 X 1080 பிக்ஸல் திரை துல்லியத்தினை சிறப்பாக வழங்கும். 2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் எஸ்-4 சாம்சங் எக்ஸினோஸ் எஸ்-450 சிப்செட் தொழில் நுட்ப வசதியினையும், கார்டெக்ஸ் ஏ-15 பிராசஸரினையும் கொடுக்கும்.

புதிய வசதிகளில் அசத்த வரும் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போனின் திரை தொழில் நுட்பம் பற்றி சில தகவல்கள் கசிவது போல் இதன் கேமரா வசதி பற்றியும் பேசப்படுகிறது. இதில் 13 மெகா பிக்ஸல் கேமராவினை பெறலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆன்ட்ராய்டு 4.2 அல்லது ஆன்ட்ராய்டு 5.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்

என்கிறது இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி போன்ற மெமரி வசதி கொண்டதாக இருந்தது. மெமரி வசதியில் இந்த கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வசதியினை வழங்கும் என்று வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது இன்னுமொரு தகவல்.

2013ம் ஆண்டு இந்த புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன், சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, 3,200 எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகளை வழங்கும் என்பது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் தகவல். இருப்பினும் இந்த

ஸ்மார்ட்போன் பற்றி கசிந்திருக்கும் புகைப்படத்தினை மட்டும் இப்போது பார்க்கலாம். இதன் முடிவான தொழில் நுட்ப விவரங்களை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்.

இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்