1 இல்ல 6 ஆப்ஷன் இருக்கு.. 2025-ல் அறிமுகமான மிகவும் எடை குறைவான போன்கள்.. கையில இருக்குறதே தெரியாது!
2024 ஆம் ஆண்டு வரையிலாக ஸ்பீட், பேட்டரி லைஃப், கேமரா மற்றும் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு ஸ்மார்ட்போன்களை வாங்கிய பலரும், இந்த 2025 ஆம் ஆண்டில் "அந்த பட்டியலில்" தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் ஆனது லைட் வெயிட் ஆக இருக்க வேண்டும் என்கிற செக்லிஸ்டையும் சேர்த்துவிட்டனர்.
ஒரு ஸ்மார்ட்போனின் எடை அதன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனென்றால் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன்கள் பெரிதாகி வருகின்றன, பேட்டரிகள் 5000mAh திறனை தாண்டி செல்கின்றன. இந்த இடத்தில் தான் சில ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் - ஸ்மார்ட் டிசைன், இலகுவான பொருட்கள் மற்றும் இறுக்கமான பொறியியல் உடனான லைட் வெயிட் ஸ்மார்போன்களை உருவாக்கும் முனைப்பை பெற தொடங்கின.

இதன் விளைவாக இந்த 2025 ஆம் ஆண்டில் இதுவரை பல லைட் வெயிட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. அவைகளில் மிகவும் லைட் வெயிட் ஆன டாப் 6 ஸ்மார்ட்போன்களை பற்றித்தான் இங்கே காண உள்ளோம். முதலில் அந்த ஸ்மார்ட்போன்ககளையும் அவைகளின் எடை அளவுகளையும் பார்த்து விடலாம். அவைகளின் அம்சங்களை பற்றி பார்க்கலாம்:
1. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) - 162 கிராம்
2. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) - 163g கிராம்
3. ஷாவ்மீ 15 (Xiaomi 15) 189 - 191 கிராம்
4. கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) - 186 கிராம்
5. விவோ வி50 (Vivo V50) - 189 கிராம்
6. மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 (Motorola Razr Ultra 2025) - 199 கிராம்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.
கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்


Click it and Unblock the Notifications








