ரியல்மி முதல் போக்கோ வரை.. ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..
இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக பட்ஜெட் விலை போன்களுக்கு தான் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களின் ( 5G phones) பட்டியலைப் பார்க்கலாம்.
1.ரியல்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.19,934 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் வசதி உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ், 7000mAh பேட்டரி, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு, 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.
2. விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) ஸ்மார்ட்போன் ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999 விலையில வாங்கிவிட முடியும்.
6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி டூயர் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset), IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 5700mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ டி4ஆர் 5ஜி போனில் உள்ளன.
3.மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்களை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி உள்ளது. எனவே இந்த போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.
6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், டால்பி அட்மாஸ், 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.
4.சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதி இதில் உள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 13எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6 வருட ஓஎஸ் அப்டேட்கள், 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5.போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 20எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட், 6.67-இன்ச் டிஸ்பிளே , 5500எம்ஏஏச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications