இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆண்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பொற்காலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்

போட்டிகள் இருந்தாலும், புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு தருவதில் ஒவ்வொரு நிறுவனங்களும் ரூம் போட்டு யோசித்து வருகின்றன. அதேபோல் வாடிக்கையாளர்களும் எந்த புதிய போனை தேர்வு செய்வது என்பதற்கே அதிக நேரம் எடுத்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சீன நிறுவனங்கள் உள்பட உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் பல அற்புதமான மாடல்களை புதிய, நவீன டெக்னாலஜி அம்சங்களுடன் வெளியிட காத்திருக்கின்றன. இந்த வருடம் எந்தெந்த மாடல்கள் சந்தையை கலக்கும் என்பதை பார்ப்போமா!

சாம்சங் கேலக்ஸி S8:

சாம்சங் கேலக்ஸி S8:

சாம்சங் நோட் 7 தந்த கசப்பான அனுபவம் காரணமாக, இந்த முறை சாம்சங் கேலக்ஸி S8 மாடலை மிகவும் கவனமாக, வாடிக்கையாளர்கள் கையில் செல்வதற்கு முன்னர் பலகட்ட சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த MWC டெக்னாலஜி கருத்தரங்கில் இந்த போன் குறித்த எவ்வித தகவலையும் சாம்சங் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் இரண்டு வித மாடல்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. 5.8 இன்ச் டிஸ்ப்ளே சைஸில் சாம்சங் கேலக்ஸி S8 மாடலும், 6.2 இன்ஸ் டிஸ்ப்ளே சைஸில் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் மாடலும் வெளிவரவுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் என இரண்டு மாடல்களுமே ஸ்னாப்டிராகன் 835 SoC அம்சங்களுடன் ஒருசில மார்க்கெட்டுகளிலும், மற்ற பகுதிகளில் சாம்சங் எக்ஸினோஸ் 9 சீரியஸின் 8895 SoC அம்சங்களிலும் வெளிவரவுள்ளது.

இந்த மாடல்களின் ஸ்டோரேஜை பொருத்தவரையில் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி இருக்கும். மேலும் இந்த மாடல்களில் 12 MP பின் கேமிரா மற்றும் 8 MP செல்பி கேமிராவும் இருக்கும். இரண்டு மாடல்களுமே வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட் அம்சம் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 : ஏன் வாங்க கூடாது என்பதற்கான 3 காரணங்கள்.!?

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்களுக்கு பின்னர் ஐபோனின் ராஜா என்று கூறப்படும் ஆப்பிள் அடுத்து ரிலீஸ் செய்ய உள்ள மாடல் தான் ஆப்பிள் ஐபோன் 8. இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தொடங்கி 10வது ஆண்டு என்பதால் இந்த ஐபோன் 8 மாடலை முற்றிலும் வித்தியாசமான மாடலில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் 8 ப்ளஸ் என இரண்டு மாடல்களுமே புதிய டிசைனில் மட்டுமின்றி இதுவரை ஐபோன் வாடிக்கையாளர்கள் பெற்றிராத புதிய வசதிகளையும் அறிமுகம் செய்யவுள்ளது.

அடுத்த தலைமுறையின் பிராஸசர் என்று கருதப்படும் A10X அல்லது A11 பிராஸசர்கள் இந்த போனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கண்ணாடி மற்றும் ஸ்டீல் பாடியுடன் கர்வ், எட்ஜ் டு எட்ஜ் மற்றும் OLED டிஸ்ப்ளே என வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்த இந்த மாடல் காத்திருக்கின்றது. மேலும் இந்த மாடலில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் வயர்லெஸ் சார்ஜர் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி விர்ட்டியுவல் ஹோம் பட்டன், வாட்டர் ரெசிஸ்டெண்ட், டுயல் கேமிரா, ஏஆர் செட் அப், ஐரிஸ் ஸ்கேனர் என எண்ணற்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஒன் ப்ளஸ் 5:

ஒன் ப்ளஸ் 5:

சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T ஆகிய மாடல்கள் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த மாடல்தான் ஒன்ப்ளஸ் 5.

இதுவரை இந்த போன் குறித்து வெளிவந்த தகவல்களின் படி இந்த போன் கர்வ் கிளாஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அமைந்திருக்கும் என்றும், இந்த மாடலில் ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T ஆகிய மாடல்களில் இருந்தது போல 6GB ரேம் இல்லாமல் 7 GB அல்லது 8GB ரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HTC 11:

HTC 11:

சமீபத்தில் HTC நிறுவனம் அல்ட்ரா மாடலை வெளியிட நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த மாடல்தான் HTC 11. HTC 10 மாடலுக்கு பின்னர் வெளிவரவுள்ள இந்த புதிய மாடலில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கும் என்று பெரும்பாலான தகவல்கள் வெளிவரவில்லை

இருப்பினும் இதுவரை கசிந்த தகவலின்படி பார்த்தால் இந்த போன் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே மற்றும், குவால்கோ ஸ்னாப்டிராகன் 8835 சிப்செட் மற்றும் 8GB ரேம் ஆகியவை இருக்கலாம். மேலும் அல்ட்ரா பிக்சல் கேமிரா இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. இந்த மாடல் கூகுள் பிக்சல், ஐபோன் மற்றும் கேலக்ஸி S8 ஆகிய மாடல்களுக்கு பெரும் சவாலாகவும் போட்டியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

சியாமி மி 6:

சியாமி மி 6:

சமீபத்தில் வெளியான சியாமி நிறுவனத்தின் மி 5 மாடல் சுனாமி போன்று சந்தையை ஒரு புரட்டு புரட்டிவிட்ட நிலையில் வெகுவிரைவில் இந்நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ள மாடல்தான் சியாமி மி 6.

இந்த மாடலும் கர்வ்ட் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 835 SoC அல்லது அதைவிட நவீன டெக்னாலஜி அம்சமான பின்கோர் பிராஸசர் இருக்கலாம். மேலும் இந்த மாடலில் ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் இருப்பது போன்று வயர்லெஸ் சார்ஜர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Moving forward in 2017, this time seems to be an interesting period for Android maker as everyone tries to claim the No.1 throne.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X