செப்டம்பர் 2017 : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
சியோமி ரெட்மி 4 நோட் விலைப் பொறுத்தவரை ரூ.6,999ஆக உள்ளது. 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (720-1280)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.
இப்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே சியோமி, மோட்டோரோலா போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிக அளவு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை மொபைல் சந்தையில் விற்பனை செய்துவருகின்றன.
இப்போது வரும் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் ஆப் மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்கள் பயன்படுத்துவதற்க்கு இது போன்ற பட்ஜெட் மொபைல்போன்கள் அதிகமாய் பயன்படுகின்றன. அதன்பின் ரூ.7,000/-விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 4:
சியோமி ரெட்மி 4 நோட் விலைப் பொறுத்தவரை ரூ.6,999ஆக உள்ளது. 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (720-1280)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலியைக் கொண்டதாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2/3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ரெட்மி 4.

இன்ஃபோகஸ் டர்போ 5 :
இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் டூயல் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 5எம்பி கொண்டவையாக உள்ளது. இக்கருவி 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும்(720-1280)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

யூ யூனிக் 2:
யூ யூனிக் 2 விலைப் பொறுத்தவரை ரூ.5,999ஆக உள்ளது. இக்கருவி 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (720-1280)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளதுஇ 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த யூ யூனிக் 2 ஸ்மார்ட்போன். குவாட்கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ சி பிளஸ்:
மோட்டோ சி பிளஸ் ரூ.6,999-க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (1280-720)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இவற்றுள் அடக்கம். 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்.

குல்ட் பியாண்ட்;
குல்ட் பியாண்ட்ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும்,1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 எஸ்ஓசி உடனான 3 ஜிபி ரேம் மற்றும் மாலி- டி720 ஜிபியூ கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. குல்ட் கிளாடியேட்டர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவெனில் அதன் பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா ஆகியவைகள் தான். ரூ.6,999/- என்றவொரு பட்ஜெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications