செப்டம்பர் 2017 : ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625செயலியைக் கொண்டுள்ளது.
இந்த மாதம் பல மொபைல்; நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது, மேலும் லெனோவோ கே8 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது, இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த லெனோவோ கே8 ஸ்மார்ட்போன் மாடல்.
மொபைல் சந்தையில் இப்போது புதிய மென்பொருள் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். தற்போது ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி மி ஏ1:
சியோமி மி ஏ1 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
ஸ்னாப்டிராகன் 625செயலியைக் கொண்டுள்ளது. இவற்றின் ரியர் கேமரா 12எம்பி மற்றும் செல்பீ கேமரா 5எம்பி-ஆக உள்ளது. 3080எம்ஏஎச்
பேட்டரி இவற்றுள் அடக்கம். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது சியோமி மி ஏ1, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999ஆக உள்ளது.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625செயலியைக் கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இவற்றின் டூயல் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 13எம்பி-ஆக உள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999ஆக உள்ளது.

லெனோவோ கே8:
இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, 2.3ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் மீடியா டெக் செயலி இவற்றுள்இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் டூயல் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 5எம்பி-ஆக உள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். அதன்பின்பு இக்கருவியின் விலை ரூ.13,999ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 மேக்ஸ்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியா டெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றின் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 13எம்பி-ஆக உள்ளது. 3000எம்ஏஎச்
பேட்டரி இவற்றுள் அடக்கம். இக்கருவியின் விலை ரூ.17,900ஆக உள்ளது.

ஜியோனி ஏ1:
ஜியோனி ஏ1 ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியா டெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இவற்றின் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 16எம்பி-ஆக உள்ளது.
4010எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். இக்கருவியின் விலை ரூ.15,999ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications