Just In
- 12 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 16 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 16 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 18 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரூ.10,000 விலையில் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றவுடன் பல பேர் சொல்லுவது அதன் விலையை தான். இந்த விலைக்குள் ஸ்மார்ட்போன் வேண்டும் என்கிறார்கள். அப்படி விலையை வைத்து ஸ்மார்ட்போனை எடுத்தாலும் அந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதா என்று தெரிந்து கொள்ள இதோ இங்கே ஓர் பட்டியல். இதில் ரூ.10,000 விலைக்கும் குறைவான
ஸ்மார்ட்போன்கள் எது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் (பி5512) ஸ்மார்ட்போன் முதலில் உள்ளது என்று சொல்லலாம். கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டியூவல் சிம் நெட்வொர்கிற்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும். இதில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் எளிதாக இயங்க 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது.
கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் 2.6 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான புகைப்படத்தினையும் எளிதாக கொடுக்கும். இது மட்டுமல்லாமல் இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டது.
இந்த கேலக்ஸி ப்ரோ டியோஸில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் 1,350 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் நீடித்து உழைக்கும் சிறப்பான ஆற்றலை பெற முடியும். மேலும் இந்த பேட்டரி 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,500 விலையில் பெற முடியும்.
அடுத்து மோட்டோரோலா ஃபையர் எக்ஸ்டி ஸ்மார்ட்போனும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை வழங்கும். வைபை, புளூடூத் மற்றும் எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனையும் கவர்ச்சிகரமான விலையில் பெறலாம். இந்த
மோட்டோரோலா ஃபையர் ஸ்மார்ட்போனை ரூ.9,900 விலையில் பெறலாம். பத்தாயிரம் விலையில் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனையும் பெறலாம். கர்வ்-9220 ஸ்மார்ட்போன் 1.2 தடிமன் கொண்டது. கையாளுவதற்கு எளிதாக இருக்கும் இந்த கர்வ் ஸ்மார்ட்போன், 2.44 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரையினை கொண்டதால், 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
பிளாக்பெர்ரி 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 600 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக வழங்கும். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000.
அடுத்ததாக யூசர் ஃப்ரென்ட்லி என்று பெயரெடுத்த நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனையும் மேல் கூறப்பட்டுள்ள விலையில் எளிதாக பெற முடியும். சிம்பையன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போனில், 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் டிஎப்டி திரை தொழில் நுட்பத்துடன் 640 X 360 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். புகைப்படம், வீடியோ பற்றிய கவலை இந்த ஸ்மார்ட்போனை பொருத்த வரையில் தேவையே இல்லை. இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ்,
வைபை போன்ற தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் ரூ.9,500 விலையில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-50 நின்ஜா ஸ்மார்ட்போனும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிக முக்கியமாக பேசப்படுகிற தொழில் நுட்பம் இதில் உள்ள எய்ஷா என்ற வாய்ஸ் கைடடு தொழில் நுட்பம். இந்த தொழில் நுட்பம், ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்பனில் உள்ள சிரி அப்ளிக்கேஷன் போல என்று கூறலாம்.
இதன் 3.1 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக தகவல்களை பார்க்கலாம். ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜ்ரபிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,000 விலையில் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470